தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று கனிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் தொற்று குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 1,310 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,40,531 ஆக உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 5,374 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிகை 33,75,281 ஆக உள்ளது.
மேலும் கொரோனாவுக்கு ஒரே நாளில், 10 பேர் உயொரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,956 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும், 27,294 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் மட்டும், 296 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,47,791 ஆக உயர்ந்துள்ளது.
பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் என சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.