தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறையுமா
நாட்டில் கொரோனா குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகின்றது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பானது மிகப்பெரிய அளவில் இருக்கின்றது. இந்தியாவின் கொரோனோ நோய் தாக்குதல் குறைந்துவருகின்றது. மேலும் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த வைரஸ் தாக்கி குணமடைந்து பிழைத்தவர்கள் எண்ணிக்கை மே மாதத்தில் 26 சதவீதமாக இருந்தது.

தற்போது 63% ஆக உயர்ந்து வருகின்றது.இந்த நோயின் வீரியம் நாளுக்கு நாள் குறைவடைகின்றது என்பது தெரிகின்றது கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக குணமடையும் மாநிலமாக குஜராத் இருக்கின்றது. இங்கு 70 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர் என்ற தகவல்கள் கிடைக்கின்றன. அதேபோன்று ஒடிசா மாநிலத்தில் 65 சதவீதத்தினர் குணமடைந்து இருக்கின்றனர் தமிழ்நாட்டில் இதில் வீரியத்தை கட்டுப்படுத்த முடியாத அளவு பெறுகின்றது.
இங்கு நோய் தொற்று அதிகரித்து காணப்படுகின்றது. தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களில்தான் சுமார் 50 சதவீதத்தினர் மேற்பட்டோர் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். ஆகவே இங்கு அரசு தீவிரமாக நோய்தொற்று எண்ணிக்கை குறைக்க வேண்டும் என்றும் மெனகெடுகின்றது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மக்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று உள்ளது. இதுபோல் நிலைமை அதிகரித்தாள் அதற்கான போர்கால நடவடிக்கையினை அரசு செய்யும். மேலும் மதுரை போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இந்த நிலையில் நாளை இந்திய பிரதமர் மோடி அவர்கள் மக்களிடையே உரையாற்ற இருக்கின்றார் என்ற தகவல்களும் கிடைத்துள்ளன. நாட்டில் மக்களின் நலவாழ்வும் பாதுகாப்பும் நலனும் முக்கியம் என்பதனை அரசு நன்கு உணர்ந்துள்ளது.
ஆசியாவிலேயே பெரிய ஸ்லம் நகரமான தாராவி கொரோனா தொற்று சாத்தியக்கூற்றுக்குத் தப்பாத பகுதி ஆனால் அங்கு அரசு செய்த நடவடிக்கையால் கொரோனா தொற்று எண்னிக்கைப் பரவலை அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். .

கொரோனா தொற்றை எதிர்ப்பு உணர்வு முதலில் மனதில் வளர்க்க வேண்டும். அதுகுறித்து அச்சம் விடுத்து அதனை எதிர்க்கும் வைராக்கியம் நமக்கு அதிகரிக்க வேண்டும். அதற்கு முக்கியமாக என்ன செய்யுங்க நாட்டையே நாளு கூறாக்கியிருக்கின்ற இந்த நோயை நாம் கட்டுப்படுத்தலன எப்படி என ஒவ்வொரு தனிமனிதரும் சிந்திக்க வேண்டும். அதுபடி பாதுகாப்பு நடவடிக்கையாக உடல் ஆரோக்கியம் உறுத செய்ய வேண்டும்.