குறைந்த கொரோனா டெல்லியில் திடிர் அதிகரிப்பு!
தமிழ்நாட்டில் சென்னையில் கொரோனா தொற்றானது பெருமளவு குறைந்து இருக்கின்றது. டெல்லியில் குறைந்த கொரோனா திடிரென அதிகரிக்க ஆரம்பித்து இருக்கின்றது.
- கோவித்-19 நோய்த் தொற்றானது குறைந்து இருந்தபோதிலும் டெல்லியில் தொற்றானது மீண்டும் அதிகரித்து இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
- கொரோனா நோய்த் தொற்று குறைந்து வருகின்றது. தினசரி குணமாவோர்கள் எண்ணிக்கை டெல்லியில் அதிகரித்து வருகின்றன.
டெல்லியில் உயரும் கொரோனோ எண்ணிக்கை
நாடு முழுவதும் கோவித்-19 குறைந்து வரும் இந்த நேரத்தில் டெல்லியில் 5000 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 5673 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
தலைநகரில் பெருகும் நோய்த்தொற்று காரணம்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் மீண்டும் நடமாடும் சூழல் இருந்தபோதும் கோவித்-19 குறையவில்லை.
ஊரடங்கு தளர்வுகள் டெல்லியில் உதவவில்லையா
அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்தபோதிலும் பாதிப்பு கொரோனா நோய்ப் பாதிப்பு குறைய வில்லை. ஊரடங்கு தளர்வு மற்றும் போக்கு வரத்து கட்டுப்பாட்டில் தளர்வு, பண்டிக்கால கொண்டாட்டத்தில் பொது இடங்களில் கூட்டம் அதிகரிப்பை உண்டாக்கியிருக்கலாம்.
கொரோனா தொற்று இறப்பு எண்ணிக்கை
நாட்டின் தலைநகரத்தில் 5000 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா உறுதியாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் இதுவரை டெல்லியில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கின்றனர்.
40 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கின்றனர். இதன் மூலம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவித்-19 பாதிப்பு காரணமாக உயிர் இழந்து இருக்கின்றனர் என்பது தெரியவருகின்றது.
அதிகரிக்கும் கொரோனோ அரசு நடவடிக்கை
அரசு டெல்லியில் தீவிர கண்காணிப்பில் கவனித்து வருகின்றது. இதன் மூலம் மீண்டும் ஊரடங்கு அலுவலகங்கள் செயல்படுவதை தடுத்தல், சோசியல் டிஸ்டென்சிங் கட்டுப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை மீண்டும் அரசு விதிக்கும் என்ற தகவல்கள் கிடைக்கின்றன. நோய் தொற்று கட்டுக்குள் இல்லாமல் போனால் மீண்டும் ஊரடங்கும் அரசு கொண்டு வரும் என தெரிகின்றது.