சென்னையில் குறைந்து வரும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று 2000 பேருக்கு மேல் உறுதியாக இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வருகின்றது. கொரோனா இன்னும் முழுமையாகத் தமிழ்நாடு முழுவதும் அதன் பாதிப்பு நீங்க வில்லை என்பது தெளிவாகின்றது.
சென்னையில் கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று தமிழ்நாட்டில் 2816 பெயருக்கு உறுதியாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். தமிழ்நாட்டில் 3000 திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பியிருக்கின்றனர்.
கொரோனா தொற்று சிகிச்சை
இந்த வேலையில் 2500க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தினசரி இறப்பு எண்ணிக்கையானது 20 முதல் 30க்கு மேல் இருக்கின்றது. சென்னையில் குறைந்து வரும் கொரோனா எண்ணிக்கையானது பாதிப்பு முற்றிலும் நீங்கவில்லை.
சென்னையில் கொரோனா எண்ணிக்கை
ஒரு நாளைக்கு ஐநூறு முதல் ஆயிரம் பேர் வரை சென்னையில் கொரோனா நோயத் தொற்று பாதிப்பு பதிவு செய்யப்படுகின்றது. கோயம்புத்தூரில் கொரோனா தொற்றானது 200 பேருக்கு மேல் பதிவாகின்றது. சென்னைக்கு அருகில் இருக்கின்ற செங்கல்பட்டில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைகள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கொரோனா விழிப்புணர்வு
தொடர்ந்து பாதுகாப்பு என்பதை விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலமாகப் பல்வேறு வழியில் மக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகின்றது. மக்களும் நிலைமையை அறிந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.