செய்திகள்தமிழகம்மருத்துவம்

கொரோனா பாதிப்பு இன்று அதிகம்

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5834 என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. எந்தளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றதோ அதே அளவிற்கு அதன் வீரியம் குறைந்து வருகின்றது.

தமிழ்நாட்டில் மட்டும் என்று 5834 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 118 பேர் உயிரிழந்துள்ளனர் குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5159 ஆகும்.

அதே போன்று தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில் சுமார் 6,000 பேர் என்று குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இத்தோடு தமிழ்நாட்டில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை தொடர்கின்றது. தற்போது தமிழ்நாட்டில் 52 ஆயிரத்து 710 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. கூடிய விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் அதிக அளவில் பெண்களை விட ஆண்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 156 பேர் வரையில் ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெண்கள் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 464 கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கிட்டத்தட்ட 20000 பரிசோதனைகள் நாளொன்றுக்கு செய்யப்படுகின்றது என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையில் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அது வருத்தத்திற்கு உரிய ஒன்றாக இருக்கின்றது. இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 54 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் கொரோனாவின் கோரப் பிடிக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கொரோனாவை விரட்ட வேக்ஸின் எல்லாம் அவசியம் இல்லை. ஆனால் உடலுக்குத் தேவைப்படும் அனைத்து சத்துக்களும் கிடைக்கப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *