கொரோனா இந்தியாவில் சமூக பரவலாகவில்லை
இந்தியாவில் சுமார் 9 லட்சம் வரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனவைரஸ் சமூக பரவலாக வில்லை என்ன மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் எங்கும் பரதி பெருமளவில் பாதிப்பை உண்டாக்கியுள்ளது.
கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் உலகமே முடங்கி போயிருக்கின்றன இருப்பினும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் பெருகிக்கொண்டே போகின்றது. இந்தியாவில் இதன் தாக்கம் பெருமளவில் இருக்கின்றது. இருப்பினும் இன்னும் கொரோனவைரஸ் இந்தியாவில் சமூக பரவலாகவில்லையென இந்திய மருத்துவ ஆராய்ச்சி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளது.
கொரோனாவின் சமூக பரவலாகவில்லை. இந்தியாவில் பெருமளவில் இல்லை என தகவல்கள் கிடைக்கின்றன. பொதுவாகச் சமூக பரவல் என்பது நோய் தொற்றுக்கு ஆளான ஒரு நபரிடம் இருந்து அவருடன் கொண்ட தொடர்பால் இந்நோய் தொற்று இல்லாத நபருக்கும் நோய் தொற்று ஏற்படுவதாகும்.
கொரோனா சமூக பரவல் இந்தியாவில் இன்னும் ஏற்படவில்லை, என்பதற்கு காரணம் நோயானது அது அருகில் இருக்கும் நாடுகளிலிருந்து பெருமளவு இந்தியாவில் வரவில்லை என்று கூறலாம். பாதிக்கப்பட்டவர் எங்கிருந்து இந்த நோயைப் பெற்றார் என்று அறிய முடியாத நிலை தோற்ற நிலை இதனையே சமூகப் பரவலற்ற நிலை என்று கூறப்படுகின்றது. இந்தியாவிற்கு இன்னும் இது போன்ற அபாயகரமான சூழல் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் உறுதி செய்யப்பட்டுள்ளன. என்னடா இது தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மொத்தமாக 9 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர்கள்.
சமூக தொற்று இல்லை என்று அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது ஒன்றுமே புரியவில்லையே எனமக்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் நிலையில் இருக்கின்றனர். தகவல்கள் எதுவும் சரியாக வரவில்லையோ என்ன அச்சம் மக்களுக்குள் இருக்கின்றது. இதனை அரசு முழுமையாக இனம்கண்டு பிடித்து மக்களுக்குள் இருக்கும் பயத்தை போக்க வேண்டும். இது அரசின் முக்கிய கடமையாகும்