இந்தியாவில் குறையாத கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் குறையாத கொரோனா 60 லட்சத்தைக் கடந்து அச்சத்தில் இந்தியாவை ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை தற்போது இந்தியாவில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெருகிவரும் கொரோனா
கடந்த சில வாரங்கள் தினசரி 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 24 மணி நேரத்தில் மட்டும் 82, 170 பேருக்கு மேல் கொரோனா உறுதியாகி சிகிச்சை மருத்துவமனையில் பெற்று வருகின்றனர்.
60 லட்சத்தை தொட்ட கொரோனா:
இந்தியாவில் கொரோனா இதுவரை மாதிக்கப்பட்டோர் மொத்தம் 60, 74,702 பேர் ஆவார்கள். இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக இருப்பவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 95 ஆயிரத்து 542 பேர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் கொரோனா:
இந்தியாவில் இன்னும் 9,62,640 மேற்பட்டோர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இயல்பு நிலை திரும்ப அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றது.
ஒரு நாளைக்கு சென்னையில் ஐயாயிரத்து மேற்பட்டோர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா குறைந்து வருகின்றது என்று சொல்லிக்கொண்டாலும் அந்தத் தொற்று புதிதாகப் பரவுவது குறையவில்லை.
சிகிச்சையில் மக்கள்:
இதுவரை தமிழகத்தில் ஐஞ்சு லட்சம் பேர்கள் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தகவலும் கிடைக்கின்றது.
கொரோனா இறப்புக்கள்:
கொரோனா காரணமாக நாளொன்றுக்கு 100 பேர் வீதம் இறக்கின்றனர். தமிழ்நாட்டில் 100 பேர் வீதம் இறந்துவருகின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் 9313 மேற்பட்டோர் தொற்று காரணமாக இறந்துள்ளனர் என்று தகவல்கள் கிடைக்கின்றன.
சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் தமிழகத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதனை கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்டுள்ளனர் சுகாதாரத்துறை தொடர்ந்து தனது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.