வெள்ளெலிகள் மூலம் கொரோனா ” – ஷாக் தரும் ஆய்வு முடிவு..!
வெள்ள எலிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவிருக்கக்ககூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலர் வேலையிழந்து, பசி மற்றும் கல்வியை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
இதனையடுத்து கொரோனாவின் உருமாறிய மரபு வைரஸ் ஒமிக்ரான் மக்களை மேலும் களங்கடித்தது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பூனை, புலி, சிங்கம், என வன விலங்குகளுக்கும் பரவி வந்தது. குறிப்பாக உயிரியல் பூங்காவில் உள்ள பெரும்பாலன சிங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது அதிர்சியை ஏற்படுத்தியது.
தற்போது வைரஸ் பரவல் குறைந்த போதிலும், பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அந்தந்த அரசுகள் வலியுறுத்தி வருகிறது இந்நிலையில், ஹாங்காங்கில் ஹாம்ஸ்டர் எனப்படும் வெள்ளெலிகள் மத்தியில் கொரோனா பரவி வருவது அனைவரது புருவத்தையும் விரிய செய்தது.
அங்கு இருக்கும் ஹாம்ஸ்டர் எலி வளர்ப்பு மையத்தில் தான் முதலில் ஒரு எலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு உள்ள வெள்ளை எலிகளை சோதனை செய்ததில் 11 வெள்ளை எலிகளுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து எலிகளுக்கும் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருந்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
இங்கு உள்ள எலிகளை மக்கள் வீடுகளில் வளர்பதற்கு வாங்கி செல்வது வழக்கம், அந்த வகையில் வாங்கி சென்ற எலிகளுக்கு கொரோனா உள்ளது என சோதனை செய்யப்பட்டது. அதில் சுமார் 50 எலிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் எலிகள் மூலம் இந்த தொற்று மனிதர்களுக்கும் பரவியிருக்கலாம் எனவும், இதனால் அடுத்து பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்சியாளர்கள் கூறி வருகின்றனர்.