மகராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா நோய்தொற்று ஆட்டம் காணும் மகாராஷ்டிரா மக்கள் என நிலைமை மாறுகின்றது. மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 3670 பேருக்கு கொவித்-19 உறுதியாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3670 பேருக்கு பெருந்தொற்று சிகிச்சை தொடங்கப்பட்டு இருக்கின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் என்று 36 பேர் ஆவார்கள்.
சுமார் 20 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு மேல் கோவித்-19னால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். நாடு முழுவதும் நோய்தொற்று குறைந்து வருகின்றது என்று இருக்கையில் தற்போது மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கில் அதிகமாக உள்ளது. இது மேலும் பயத்தை உண்டாக்கி இருக்கின்றது.
சிகிச்சை விவரங்கள்
மகராஷ்டிராவில் கடந்த 24 மணு நேரத்தில் 2400 பேருக்கு மேல் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்று உள்ளனர். இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமாகி வீட்டில் இருக்கின்றனர். சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பையில் கோவித்-19
மகாராஷ்டிராவின் தலைநகரமான மும்பையில் மற்றும் 599 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதியாகி சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். மும்பையில் மட்டும் இறந்தவர்கள் எண்ணிக்கை நான்கு ஆகும். இதுவரை 11 ஆயிரத்து 450 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.