தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை..?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சுகாதார செயலாளர் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,52,334 ஆக உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 118 பேர் குணமடைந்துள்ளதாகவும், இன்று கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நஆள் குறைந்து வருவதால் மக்கள் அன்றாட பணிகளில் வழக்கம் போல் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 25வது மெகா தடுப்பூசி முகாம் குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பிற நாடுகளில் தொடர்ந்து கொரோனா 4 ஆம் அலை பரவும் சூழ்நிலை உள்ளதால் கொரனோ தோற்று விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் மற்ற நாடுகளைப் போல் நாமும் கொரானா தொற்றால் அவதிப்படும் சூழல் உருவாகும். மேலும் வரும் நாட்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு தேடி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது.தமிழகத்தில் கொரோனா 4 ஆம் அலை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் நோய் தொற்று நோய் பரவலை தடுக்க முகக் கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் உள்ளிட்டவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்” எனக் கூறினார்.