சபாஷ் தோனி கூல் பிளேயரா சாதிச்சிட்டிங்க
கேப்டன் தோனி
கேப்டன் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் இணையில்லா தலைவர் என்றே சொல்லலாம். கேப்டன் தோனி தலைமை பொறுப்பில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி தனது உணர்வுகளை சரிசமமாக பேலன்ஸ் செய்து ஒரு சிறந்த விளையாட்டு வீரராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
கூல் பிளேயரின் சாதனைகள்
சென்னை அணியினரான சிஎஸ்கே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக தோனி கடைசி 6 பந்தில் 16 ரன்கள் அடித்து சென்னை கிங்ஸ் அணிக்கு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை வாங்கிக்கொடுத்தார். இந்த போட்டியில் தோனி தொலைத்து எடுத்துவிட்டார். தனது பாணியில் சிறந்த ஆட்டங்களை இன்றுவரை வெளிப்படுத்துகின்றார். இதனை பெவிலியனில் இருந்து பார்த்து ரசித்த தோனியின் மனைவி சாக்ஷி கண்ணீர் விட்டு அழுதார் என்றே சொல்லலாம்.
எந்த தருணத்திலும் கட்டுப்பாடு
ஒரு மனிதன் எப்படி? இப்படி எல்லா தருணங்களிலும் ஒன்றுபோல் இருக்க முடிகின்றது. அதிலும் கடைசி நேரத்தில் அதுவும் அப்போதுதான் நெருக்கடியில் இருக்கின்றோம் என்றால் மனித இயல்பு தடுமாறும் தவறுகள் நடக்கும். அதனையெல்லாம் அடித்து துவம்சம் செய்து தானொரு கூல் பிளேயர் என்று நிரூபித்துவிட்டார். இந்தியா இவரைப்போன்ற வீரர்களை பெற்றிருப்பதால் பெருமையில் காலரைத் தூக்கிவிடலாம். தோனி இந்திய அணியின் பெருமைதான்.