சமையல் குறிப்புவாழ்க்கை முறை

மணக்க.. சுவைக்க! டிப்ஸ்.. டிப்ஸ்..

குக்கரில் சாதம் வைக்கும் போது குக்கரின் நிறம் மாறாமல் இருக்க தண்ணீரில் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு விடலாம். பாஸ்மதி அரிசியை குக்கரில் வைக்கும் போது சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வேக வைத்த சாதம் நன்றாக தனித்தனியாக பிரிந்து நன்றாக வெந்துவிடும்.

சப்பாத்தி மாவு பிசையும் போது சுடு தண்ணீர் ஊற்றிப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். காய்கறிகளை அறிந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் காய்கறிகளில் உள்ள சத்து குறைந்து விடும். இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலைக் காம்பு கில்லாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமல் இருக்கும்.

இட்லி மாவு மிருதுவாக அரைப்பதற்கு சிறிது வெண்டைக்காய் போட்டு அரைத்தால் இட்லி மாவு மிருதுவாக இருக்கும். கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைப்பதால் புளிக்காது.

கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டுகள் பிடிக்காது. உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பில்லாத தயிர் அரை கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். சேனைக்கிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்து விட்டு, பிறகு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்து விடும்.

சப்பாத்தி எப்போதும் சூடாக இருப்பதற்கு சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும். தோசை சுடும் போது தோசைக் கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு தோசை வராமல் இருந்தால், புளியை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்து விட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

சமையலில் உப்பு அதிகமாக போய் விட்டால் உருளைகிழங்கை அறிந்து போட்டால் உப்பை எடுத்து விடும். இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *