சினிமாசின்னத்திரை

குதுகலமாய் தொடரும் குக்குவித் கோமாளி புரோமோ!..

குக் வித் கோமாளி பொழுதுபோக்கு சமையல் காமெடி நிகழ்ச்சியானது ஸ்டார் விஜய் சேனலில் பட்டையைக் கிளப்பி சக்கை போடு போட்டு வருகின்றது.

வார வாரம் காமெடி ஆரவாரமாக சமையல் செய்ய போட்டியாளர்களும் அவர்களுக்கு உதவும் கோமாளிகளின் நகைச்சுவை சிறப்பாக தங்களது நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

குக்கு வித் கோமாளி தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் பிடித்த ஒன்றாக இருக்கின்றது. கோமாளி பார்ட் 1 என அழைக்கப்படும் சீசன் 1 சிறப்பாக இருந்தது. மக்களின் அதிவேக வேலை அழுத்தங்கள் மறந்து வாரம் இரண்டு நாள் காமெடியாக அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியாக இருந்தது.

குக்வித் கோமாளியில் திரு விஜய் டிவி புகழ் மற்றும் சிவாங்கி அத்துடன் ஷரத், பஞ்ச் கவுண்டர் பாலா போன்றவர்கள் சிறப்பாக தங்களது காமெடி திறன்களை வெளிப்படுத்தி மக்களை மகிழ்விக்க இருக்கின்றனர்.

மேலும் படிக்க : காற்று வெளியிடை நாயகி மக்களுக்கு என்ன செய்தி வைத்துள்ளார்

குக்வித் கோமாளி சமையல் டிரெண்டிங்கில் வார வாரம் என்னவாக இருக்கும் என ஆவலாக மக்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி மக்களுக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்தி இருக்கின்றது.

குக்கு வித் கோமாளி காமெடி சீசன் 1 மிகவும் பிரசித்தி பெற்ற மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்ட சீசன் 1 போட்டியாளர்கள் சீசன் 2 போட்டியாளர்கள் இடையே கொண்டாட்ட நிகழ்வாக போட்டிகள் இந்த வாரம் நடைபெற இருக்கின்றது அதனை மக்கள் கண்டுகளிக்க ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் இந்த வார புரோமோவில் நமது பாபா பாஸ்கர் மற்றும் வனிதா இடையே காரசார பேச்சு கலக்கலாக இருக்கின்றது.

கோமாளிகள் நகைச்சுவை :

கோமாளிகள் அனைவருக்கும் இது கொண்டாட்ட காலம் என்று சொல்லலாம். கோமாளி நிகழ்ச்சியானது அனைவருக்கும் பிடித்த சமையல் நிகழ்ச்சியாக இருக்கின்றது. ஆதலால் இந்த நிகழ்ச்சியை மேலும் அதிக நேரம் ஒளிபரப்ப மக்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் இதற்கு ஒளிபரப்புவது கடினம் என்பதால் ஒருசில எபிசோடுகளை அதிகப்படுத்த குக் வித் கோமாளி இயக்குனர் பார்த்திபன் மணி அவர்கள் புதுப்புது யுத்திகளை பயன்படுத்தி மக்களை கவலைகளை மறக்க வைக்க ஆயத்தமாகி வருகின்றார். அந்த வகையில் இந்த வாரம் காமெடி மற்றும் கலர்கலரான சமையலுக்கும் பஞ்சம் இருக்காது என்பது தெளிவாக தெரிகின்றது.

மேலும் படிக்க : சீரியல் நடிகர் நந்தகாேபால் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *