காங்.. பின் புத்தி…..போட்டு தாக்கிய பிரதமர் மோடி..!
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.
அதில் பேசிய பிரதமர்; கொரோனா பேரிடருக்குப் பிறகு புதிய உலக நாடுகள் வரிசை உருவாகியுள்ளது; நாம் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். உலகளாவிய தலைமைப் பாத்திரத்தை இந்தியா ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரதமர்; “நாடு முழுவதும் இன்று ஏழை மக்கள் வீடு, கேஸ் இணைப்பு, மற்றும் சொந்த வங்கிக் கணக்குகளை பெற்றுள்ளனர். ஆனால், எதிர்க்கட்சியினர் மனம் இன்னும் 2014 காலக்கட்டத்திலேயே சிக்கியுள்ளது.” என காங்கிரஸ் கட்சியை சூசகமாக விமர்சித்தார்.
பல தேர்தல்களில் தோல்வியடைந்த பிறகும் உங்கள் (காங்கிரஸ்) ‘ ஈகோ வில் எந்த மாற்றமும் இல்லை என காட்டமாக தெரிவித்துள்ளார். நாகாலாந்து 24 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸுக்கு வாக்களித்தது, ஒடிசா 27 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு வாக்களித்தது. 28 ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் முழுப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றீர்கள். 1988ல் திரிபுரா காங்கிரசுக்கு வாக்களித்தது. 1972ல் மேற்கு பெங்கா காங்கிரஸுக்கு வாக்களித்தது. தெலுங்கானாவை உருவாக்கியதற்காக நீங்கள் பெருமை கொள்கிறீர்கள் ஆனால் பொதுமக்கள் உங்களை இன்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.