வியப்பும் தேவையில்லை தாழ்வுணர்வும் தேவையில்லை
தாழ்வுணர்வு தேவையில்லை
பல மனிதர்களை கண்டு இவர்கள் எல்லாம் எப்படி இப்படி இருக்கிறார்கள்?
கடவுள் இவர்களுக்கு மட்டுமே அள்ளி கொடுக்கிறான், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது?
என்னை மட்டும் ஏன் கடவுள் சோதிக்கிறான்?
நான் எவ்வளவு திறமை படைத்தவன்? என் திறமைக்கேற்ற அங்கீகாரம் ஏன் எனக்கு கிடைக்கவில்லை? என்று பல புலம்பல்கள் உண்டு.
வியப்பு தேவையில்லை
ஒரு சூழ்நிலையில் இப்படி இருக்க, மற்றொரு காரணிகளோ பல மனிதர்களை பார்த்து வியப்படைகிறோம். இவன் அதிசய பிறவியாக இருப்பானோ?
எங்கிருந்துதான் இவ்வளவு பணம் வருகிறது இவனுக்கு?
முயற்சி செய்யாமலே இவ்வளவு பலன்கள் இவனுக்கு கிடைக்கிறது. சரியான மச்சக்காரன் போல தெரிகிறது
சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இவ்வளவு திறமைசாலியா? இன்னும் பெரியவனானால் நம்மை சாப்பிட்டு விடுவான் போல தெரிகிறதே என்று பல மனிதர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் பார்த்து வியப்படைவதும் உண்டு.
காரணம் என்ன?
இப்படிப்பட்ட வியப்பிற்கு எதிரே உள்ள மனிதரின் திறமையும் காரணமில்லை, உங்களுக்குள் தோன்றும் தாழ்வுணர்விற்கு உங்களின் இயலாமையும் காரணமில்லை. வேறு எதுதான் காரணம்?
மூல காரணம்
இதெல்லாம் நம்மில் தோன்றும் காரணங்களாக தெரிந்தாலும் இவை மறைமுக எதிரிகளே. நேரடியான எதிரி நம்மீது நாம் வைத்துள்ளும் நம்பிக்கையின் அளவே.
ஆம்!
நம் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவை பொறுத்தே பிறர் மீது எழும் வியப்பும், நம்மிடையே தோன்றும் தாழ்வுணர்ச்சியும் நிர்ணயமாகும். ஒருவர் மீது முழு நம்பிக்கை அதாவது தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் மனிதருக்கு இவை இரண்டும் இருக்கவே இருக்காது.
எப்படி என்று கேட்டால்,
தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் மனிதர்களுக்கு பிறரின் வளர்ச்சியை பார்த்து, ‘பொறாமை’ வருவது குறிப்படத்தக்கது.
தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் மனிதர்களுக்கு பிறரின் வளர்ச்சியை பாரத்து, ‘வியப்பு’ மற்றும் ‘தன்னையே தாழ்த்திக் கொள்ளும் மனப்பாங்கு’ போன்ற செயல்கள் பிறப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
எதுதான் சரி?
“மிகினும் குறையினும் நோய் செய்யும்” என்னும் பழமொழிக்கு ஏற்ப, குருட்டுத்தனமான நம்பிக்கையை விலக்கி, அவநம்பிக்கைகளை விரட்டி, இயல்பான மனிதர்களாக, தன்நம்பிக்கையோடு வாழ்வோம்