மழைக் காலத்தில் தலை முடி அதிகம் கொட்டுதா கவலைய விடுங்க
வெயில் முடிந்து பருவமழை நேரம் தொடங்க உள்ளது. மழைக்காலத்தில் கூந்தல் வறண்டு பிசுபிசுப்பாக இருக்கும். முடி உதிர்வு, பொடுகு, பரு போன்ற பிரச்சனை மழைக்காலத்தில் சாதாரணமாக ஏற்படக்கூடியவை.
இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்த்தல், சரியான கூந்தல் பராமரிப்பு அவசியமாகும். ஹேர் கண்டிஷனர் ஷாம்புகளை தலைக்கு பயன்படுத்த வேண்டும். கேடு விளைவிக்க கூட பல்வேறு கெமிக்கல்கள் இருப்பதை தவிர்த்து, நல்ல ஹேர் கண்டிஷனர் உடைய சாம்புகளை பயன்படுத்தலாம்.
இதற்கு ஒரே தீர்வு வீட்டிலேயே தயாரித்த ஹேர் கண்டிஷனர் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே இதனை சுலபமாக செய்து விடலாம். இயற்கை முறையில் செய்யப்படும் இந்த கண்டிசனர் கூந்தலுக்கு தேவையான புரதச் சத்தை கொடுப்பதோடு பிஹெச் அளவை சீர் செய்ய உதவுகின்றன.
தயிர் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை கொண்டு தனித்தனியாக தலைக்கு குளிக்கும் போது இதை அப்ளை செய்து ஊற வைத்து தேய்த்துக் குளிப்பதால் பொலிவிழந்த கூந்தலுக்கு புரதச்சத்து கிடைக்கும்.
கூந்தல் மிருதுவாக இருப்பதற்கு கற்றாலை ஜெல், சியா வெண்ணை பெரிதும் உதவும். பொடுகு தொல்லையிலிருந்து விடுபட்டு முழு ஊட்டச்சத்தை பெற்று ஆரோக்கியமான கூந்தலைப் பெற பயன்படுத்தலாம்.
கெமிக்கல் நிறைந்த விலை உயர்ந்த ஹேர் கண்டிஷனர் கடைகளில் வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே இயற்கை முறையில் கண்டிஷனர் தயாரித்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
இது ஆரோக்கியமான கூந்தலை தருவதோடு அனைத்து விதமான பிரச்சினைகளையும் விரட்டி விடுகின்றன. ஆப்பிள் சீடர் வினிகர் உங்கள் தலை முடியின் கண்டிஷனர் அளவை குறைக்கும். தலைமுடி பொலிவாக வைத்திருக்க உதவுகின்றது.
ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் தண்ணீரில் கலந்து, லாவண்டர் நறுமண ஆயிலையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை உங்கள் கூந்தலில் தடவி ஊற வைத்து வாஷ் செய்து வரலாம்.