கூந்தலை பாதுகாக்க இயற்கையான கண்டிசனர்
வீட்டிலேயே தலை முடியை சைனிங் மற்றும் அழகாக சில்கியாக வளவளப்பாக ஜொலிக்க் செய்யும் கண்டிசனர் நாமே செய்யலாம். இது முற்றிலும் இயற்கையானது இதனால் எந்த பக்க விளைவுகள் ஏற்படாது. தலைமுடிக்கு இயற்கையான சைனிங் கிடைப்பதுடன் இந்த இயற்கை கண்டிசனர் தலைமுடிக்கு ஆரோக்கியத்தை கொடுத்து ஊட்டச் சத்தாக இருக்கின்றது.
இயற்கை கண்டிசனர் சைனிங் கொடுப்பதுடன் கூந்தல் உச்சி முதல் நுனி வரை பரவி நின்று வெப்பத்தினால் கூந்தலில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்து குளிர்ச்சியாக இருக்க உதவுகின்றது.
இயற்கையான கண்டிசனர் 1:
தலைக்கு இயற்கையான சீயக்காய் அல்லது கற்றாழை ஷாம்பூ வைத்து குளித்தப்பின் தேங்காய்யை அரைத்து விழுதை வடிகட்டி பாலினை தனியாக எடுத்து 2 சொட்டு ரோஸ்வாட்டர் அதிலிட்டு தேங்காய் பாலின் கலவையை தலையில் தேய்த்து 5 நிமிடம் கழித்து வெரும் தண்ணிரில் அலசினால் கூந்தல் பட்டு போன்று மிளிரும் மற்றும் இயற்கையாக ஆரோக்கியமாக இருக்கும்.
கண்டிசனர் முறை 2:வீட்டில் சமையல் செய்ய அரிசியை ஊறவைத்து கழுவிய அரிசித் தண்ணீரை தலைக்கு ஷாம்பூ போட்டு அலசியப்பின் தலைக்கு தடவி 5 நிமிடம் கழித்து தலையை வாஷ் செய்யலாம்.
கண்டிசனர் 3: ஆப்பிள் சிட்ரஸ் வினிகர் அதனை ஒரு மூடி நிறைய எடுத்து மக்கில் ஊற்றி குளித்தப்பின் தலையினை அலசினால் தலைமுடி மிருதுவாகி, சில்கியாக இருக்கும். கூந்தலில் மாய்ஸ்சுரைசருடன் இருக்கும் வறண்ட தன்மை மற்றும் கூந்தலில் ஏற்படும் முடிவெட்டு மறைகின்றது.
கண்டிசனர் 4: கற்றாழை ஜெல்லினை கூழ்போல் அரைத்து அதுனுள் ரோஸ்வாட்டர் 3 ஸ்பூன் மற்றும் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் கலந்த கலவையை தலைக்கு சீகைக்காய் வைத்து அலசியபின்பு தேய்த்து 5 நிமிடம் கழித்து தண்ணீரால் அலசினால் கூந்தல் கற்றாழை உச்சந்தலை வேர் முதல் தலை நுணிவரையுள்ள சிக்கல்களை தீர்க்கும்.
மேலே குறிப்பிட்டது போன்று தலைக்கு இயற்கையான கண்டிசனர் பயன்படுத்து முகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் முடி உதிர்தலை தடுத்து நீண்ட வளர்ச்சியைக் கொடுக்கச் செய்கின்றது.