அசத்தலான தேங்காய் சட்னி வெங்காய சட்னி.!!
அசத்தலான சட்னி வகைகள் தேங்காய் சட்னி, வெங்காய சட்னி எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம். தேங்காய் சட்னி பொட்டு கடலை அளவாக போட வேண்டும். அப்பொழுதுதான் சுவை அதிகமாக இருக்கும்.
தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள் : அரை மூடி தேங்காய் துருவல், இஞ்சி அரை துண்டு, பச்சை மிளகாய்-4, பொட்டுக் கடலை ஒரு கைப்பிடி, உப்பு தேவையான அளவு. தாளிக்க கடுகு. உளுந்தம் பருப்பு. கறிவேப்பிலை. வரமிளகாய். ஆயில் தேவையான அளவு.
செய்முறை : தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, உப்பு, இஞ்சி அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைப்பதற்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து, மிக்ஸியில் 1ல் வைத்து அரைக்க வேண்டும். மிக்ஸியில் உள்ள ஹீட் ஏறும் இதனால் மீடியம் சைஸில் வைத்து அரைக்க வேண்டும். ரொம்ப நைஸாக அரைக்கதிங்க பரபரன்னு அரைத்து எடுத்துடுங்க.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் தாளித்து, சட்னியில் கொட்டினால் சுவையான தேங்காய் சட்னி தயார்.
வெங்காய சட்னி
தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம்-2 தோலுரித்து கட் செய்து வைக்கவும். தேங்காய் 3 பல், வர மிளகாய் 4, உப்பு, புளி தேவையான அளவு. தாளிக்க கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை : மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வர மிளகாய், தேங்காய், புளி, உப்பு சேர்த்து மீடியம் சைஸில் வைத்து அரைத்து எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் தாளித்து கொட்டவும். சுவையான வெங்காய சட்னி தயார்.