“ஊர் திரும்பு” -பாகம் 1
சமுதாயத்தின் மதிப்பீடு
இளைஞர்களின் சொந்த ஊரைவிட்டு வெளியேறும் செயலானது எத்தகை கொடுமை என்று நாம் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பொதுவாக பெற்றோர்கள் மற்றும் சுற்றுப் புறத்தவர்கள் தங்கள் குழந்தைகளை வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாட்டிலோ படித்து பட்டதாரியாகி அங்கேயே குடியேறுவதைத்தான் பெருமையாகவும் கௌரவமாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
இப்படி சொந்த ஊரை விட்டு வெளியேறுவதால் அந்த ஊரின் பாரம்பரியம் பரிக்கப்படுகிறது. எப்படி என்று கேட்டால்,
வெளி மாநிலங்களுக்கு குடியேறும் இளைஞர்கள் பலரின் குடும்பம் சற்று வசதி அல்லது நடுத்தர குடும்ப வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் குடம்ப தொழில் ஏதேனும் ஒரு பாரம்பரியத்தை கடத்தி வந்ததாகவே இருக்கும். அவர்களின் குடும்பம் அப்படிப்பட்ட பாரம்பரியத்தை வளர்க்காவிட்டாலும் அந்த இளையனின் உறவினர்களாவது ஏதேனும் ஒரு பாரம்பரியத்தை வளரத்திக் கொண்டு கட்டாயம் வந்திருப்பார்கள்.
பெற்றோர்களின் அவல நிலை
இளையர்கள் தங்களின் வேலைகளுக்காக சொந்த ஊரை விட்டு வெளியேறிய சில வருடங்களில் அவர்களின் பெற்றோரின் வயதும் கடந்து விட்ட நிலையில், தாங்கள் செய்து வந்த பாரம்பரிய தொழிலில் தங்களுக்கு எவரேனும் உதவியாட்களாக வந்து நிற்கமாட்டார்களா? என்று ஏங்கி ஏங்கி, இறுதியில் ‘இனி இந்த தொழில் நம்மால் பார்க்க இயலாது’ என்று அதை மொத்தமாக நிறுத்தி விடுவோம் என்ற முடிவிற்கே வந்துவிடுகின்றனர்.
ஜாம்பவான்களின் வருகை
இப்படி ஒவ்வொரு பாரம்பரியமும் தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அவல நிலையில் சில ஜாம்பவான்கள் அவர்களின் வருகையை சிறிய சிறிய ஊர்களில் பதிக்கின்றனர்.
அந்த பாரம்பரியத்தை காப்பற்றி வந்த குடம்பத்தார்களும் வேறு வழியில்லாமல் அவர்களின் தொழில்களை நிறுத்திவிட்டு தங்களின் உடல் நலம் மற்றும் வசதிக்கேற்ப மாற்று தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விடுகின்றனர். அதுவும் நாம் நினைப்பது போன்று கௌரவமான வேலைகள் கிடைக்குமென்று கூற இயலாதே! ஏதோ தொழிற்சாலையின் கைமடிப்பு வேலையோ அல்லது கதவுகளை பாதுகாக்கும் காவலனோ ? யாருக்கு தெரியும்.
அவலத்தின் உச்சம்
இப்படியெல்லாம் மறைமுகமாக தன் பாரம்பரியம் அழிகிறது என்பதைகூட அறியாமல் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டுக்குச் சென்று குடியேறிய இளையர்களும் தங்களிடம் பாரம்பரியம் என்று ஒன்று இருந்தது என்பதே தெரியாமல் இருப்பதுதான் அவலத்தின் உச்சம்