கல்லுரி மாணவரளுக்கு செமஸ்டர்கள் இரத்து
மஜாவானக் கல்லூரி மாணவர்கள் ஊரடங்கு யாருக்கு சந்தோஷமா இல்லையோ ஆனால் இந்த கல்லூரி பள்ளி மாணவர்களுக்கு எந்தவித டென்ஷனும் இல்லாமல் படுஜோராக வீட்டில் போகின்றது. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்தானது அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து தள்ளி வைத்துக் கொண்டே போன கல்லூரி செமஸ்டர்களும் பாக்கி இருந்தது ஊரடங்கு என்னதான் தளர்வு இருந்தாலும் உறவினர் தொல்லை கொரோனாவின் தொல்லை ஓயவில்லை என்றே கூறலாம்.
கல்லூரி பயிலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குப் பருவத் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இளமைக்காலம் ஆட்டம் பாட்டம் என இருக்கும் மாணவர்களுக்கு இந்தச் செமஸ்டர் ரத்து பெரும் உற்சாகமாக அமைந்துவிட்டது.
முதல்வர் அறிவிப்பின்படி, முதலாம் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை படிக்கும் மாணவர்கள், முதுகலை பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள், பொறியியல் படிப்பில் மூன்றாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்கள், முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள், எம்சிஏ முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த செமஸ்டர்கள் ரத்து ஆகின்றன.
தேர்வு ரத்து தகவல்கள் வெளியிடப்பட்டிருந்த தற்போது உள்ள கொரோனா சூழ்நிலையில் பருவ தேர்வு நடத்துவது குறித்து ஆராய்ந்த உயர்மட்ட குழுவானது தமிழ்நாட்டில் உள்ள சூழலையைக் கருத்தில் கொண்டு, மதிப்பெண்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வழிகாட்டுதலின்படி வழங்கி மாணவர்களுக்குத் தேர்விலிருந்து விளக்கு அளித்துள்ளது. சும்மாவே நமது மாணவர்கள் அறிவிப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த கொரோனா வந்தாலும் வந்தது மாணவர்கள் பாடு பெரும் திண்டாட்டமாக இருக்கின்றது. உயர் கல்விகள் அனைத்தும் எப்படி நடத்துவது அடுத்து என்ன நடக்கும் என்று இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பருவத்தேர்வு எழுதவேண்டுமா என்று அவர்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.