17.90 கோடி வசூல்.! வேட்டையாடும் போலீஸ்! வாங்க டா வாங்க.. மக்கள் திருந்திய பாடில்லை!
தமிழகத்தில் ஊரடங்கு மீறி வெளியே சுற்றிய 8,47,574 பேர் கைதாகி ஜாமீனில் விடுவித்துள்ளனர். 6,33,555 வாகனத்தை பறிமுதல் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
பொது முடக்கம் விதிகளை மீறியதாக இதுவரை 7,72,585 வழக்கு பதிவானது ரூபாய் 17.90 கோடி அபராதம் வசூலிக்க பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியானது குறிப்பிடப்பட்டது.

மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இது தவிர ஒழுங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவதை வழக்கு பதிவு செய்து, கைது செய்வது, வாகனங்களை பறிமுதல் செய்வது, ஆகிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன.

மக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்றும் கூறியுள்ளனர். ஊரடங்கு மீறி வாகனத்தில் வெளியே சுற்றி கைதாகி ஜாமீனில் விடுவித்தது என தமிழக காவல்துறை இவ்வாறு தகவலை வெளியிட்டது.
தானா வந்து சிக்குவதால் வேட்டையாடும் போலீஸ் அபராத வசூல் தான். வாங்க டா வாங்க மக்கள் திருந்திய பாடில்லை..