சளி, இருமலா..? இனி பரிசோதனை கட்டாயம்…
கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி, இருமல், மூச்சு திணறல் ஏதேனும் இருந்தால் அவர்களும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, கடைகள் செயல்படும் நேரத்தை குறைப்பது, சுற்றுலா மையங்களில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிப்பது , திரையரங்குகளில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அத்ன்படி, கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி, இருமல், மூச்சு திணறல், உடல் வலி ஏதேனும் இருந்தால் அவர்களும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிகுறி இல்லையெனில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயளிகளுக்கு பரிசோதனை கட்டாயம் என்றும் , கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த அறிகுறி இல்லாத நபர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ளத் தேவை இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.