உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர்..?
உக்ரைன் ராணுவத்தில் கோவையை சேர்ந்த மாணவர் ஒருவர் இணைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான ராணுவ தாக்குதல் 13 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் பல பொதுமக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யா ராணுவ தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் உக்ரைன் படைகள் திணறி வருகின்றனர்.இதனைதொடர்ந்து உக்ரைன் அதிபர் வெளிநாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவை விரட்டியடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் நோட்டோ நாடுகள் உக்ரனை நொ ப்ளை ஜோனாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக பேசிய ரஷ்ய அதிபர் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு உதவும் நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலாக கருதப்படும் என எச்சரித்தார்.
இந்நிலையில் உக்ரைனுக்கு உதவுவதற்காக வெளிநாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் விரும்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், உயரம் குறைவாக இருந்த காரணத்தால் இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.