செய்திகள்தமிழகம்

ஜூலை 27 வரை கோவையில் முழு ஊரடங்கு

கோவையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. இந்த நிலையில் கோவையில் நாளை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அறிவித்துள்ளன. இதனையடுத்து கோவை மாவட்டம் நாளை மாலை முதல் திங்கள் காலை வரை மூன்று நாட்களுக்கு எந்த வித தளர்வுமின்றி ஊரடங்கில் இருக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்திருந்தார். கோவை மாவட்டத்தில் இதற்கு முன்பு குறைந்திருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் வேகமெடுத்து முழுவதுமாக பரவுகின்றது.

ஏற்கனவே தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது ஆனால் கோவை மாவட்டத்தில் சமீபகாலத்தில் நோய் தொற்று அதிகரிப்பதன் காரணமாக சிறப்பு முடிவினை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது .இதன்படி 25, 26, 27 ஆம் தேதி காலை வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

அத்தியாவசிய பொருட்களான மருந்து பொருட்கள் மற்றும் பால் ஆகியவை தவிர மற்றவை அனைத்தும் மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் இந்த முழு ஊரடங்கையும் மக்கள் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.

இன்று கோவை மாவட்டம் நிர்வாகம் அறிவிப்பின்படி மார்க்கெட்டுகள் மற்ற கடைகள் எதுவும் இயங்காது, என்ற தகவலும் கிடைத்துள்ளது. மார்க்கெட்டுகளில் பொருட்கள் கிடைக்க தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் மக்கள் முன்கூட்டியே கூட்டம் கூட்டமாகச் செல்வதைத் தடுக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மக்கள் கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் சமூக இடைவெளியை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டில் இருந்து வெளியே செல்வதை தடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *