காக்டேல் நல்லா இருக்குமா? ஒரு திரை விமர்சனம்
காக்டேல் சரக்கு மாதிரி சூப்பரா இருக்கும்னு பார்த்தா கபசுர குடிநீர் மாதிரி சுமாரா இருக்கு. ரொம்ப யோசிக்காதீங்க நானே சுருக்கமா விரிவா சொல்லறேன்.
சமீபத்தில் காக்டேல்னு யோகிபாபுவின் படம் ஒன்னு வந்திருக்கு அந்தப் படத்தோட திரை விமர்சனத்தை பார்க்க போறோம்.
காக்டேல் குழு
ரா. விஜய முருகன் இயக்குனரா களமிறங்கிய முதல் படம் காக்டேல். யோகி பாபு கதாநாயகனாகவும் இவருக்கு ஒரு ஜோடியும் இந்த படத்துல இருக்கு.
விஜய் டிவில வர நகைச்சுவை பிரபலங்கள் இந்த படத்துல களம் இறங்கி இருக்காங்க. கொக்கு வித் கோமாளி பிரபலம் புகழ் மற்றும் கலக்கப்போவது யாரு புகழ் குரேஷி, பாலா. யோகி பாபு இவங்க ஃப்ரண்ட்ஸ் ஹீரோவாகும் நம்ம மைம் கோபி வில்லனாகும் நடிச்சிருக்காங்க.
சாயாஜி ஷிண்டே எப்போது ஒரு போலீஸ் கெட்டப்பில் சூப்பரா வந்திருக்காரு. பீ. ஜி. மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் ஜூலை 10 ஆம் தேதி ஜீ5 ரிலீஸ் ஆச்சு.
கதைக்களம்
யோகி பாபு மற்றும் மூன்று நண்பர்கள் இவங்கள சுத்தி நடக்கிற கதை. ஒருவருக்கு நிச்சயதார்த்தம் அதை முன்னிட்டு எல்லாரும் பார்டி செய்யராங்க. அந்த நண்பரோட காதல் கதையை சொல்லும்போது மோமோனு ஒரு அரிய வகையான கிளி சூப்பரா இருக்கு.
சரக்கு போட்டு இவங்க அடிச்ச கூத்துல நடந்தது எதுவுமே ஞாபகம் இல்லாமல் வீட்டில் ஒரு போணம் இருக்க அதுல இருந்து எப்படி வெளில போறாங்கன்னு ஒரு பக்கம் கதை போக இன்னொரு பக்கம் சாயாஜி ஷிண்டே போலீஸ் அதிகாரியா சோழர் காலத்து சிலைய அரசு பாதுகாப்பிலிருந்து யாரோ திருட போக அதை மீட்கும் பணி இவருக்கு வருது.
மைம் கோபி தான் அந்த வில்லன் ஆனால் இவரது அசிஸ்டன்ட் எல்லாம் காமெடி வேற யாரும் இல்லைங்க நம்ம குரேஷி தான். படத்துக்கு நடுவுல அங்கங்க பாடல் வருது அதுவும் அந்த அளவுக்கு ரசிகர் அளவுக்கு இல்லை.
சிலை கடத்தல் ஒரு பக்கம், இறந்தவர்களின் உடல்களை மறைத்தல் ஒருபக்கம் இருக்க நடுவுல புகழ் வந்து இன்னொரு வில்லனா ட்விஸ்ட் கொடுக்கிறாரு. இவங்க எல்லாரும் இணைய இந்த படம் செம காமெடிங்க.
இப்ப புரியுதா ஏன் கபசுரக் குடிநீர் சொன்னேனு. கபசுரக் குடிநீர் குடிச்சா கொரோனா விட்டு போகும் வயிறு குலுங்க சிரிச்சா நோய் விட்டு போகும்.
யோகி பாபு கதாநாயகனா தர்மபிரபு, கூர்க்கா போன்ற காமெடி படங்களில் நடித்து எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினதால இந்த படம் கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தது.