செய்திகள்வேலைவாய்ப்புகள்

இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு:- மிஸ் பண்ணாதீங்க..!

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள சுமார் 80 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜனவரி 31, 2022 தேதிக்குள் விண்னப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஜின் டிரைவர், சாரங் லாஸ்கர், ஃபயர்மேன், மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர், ஐசிஇ ஃபிட்டர், ஸ்டோர் கீப்பர் கிரேடு II, ஸ்ப்ரே பெயிண்டர், எம்டி பிட்டர்/எம்டி டெக்/எம்டி டெக், எம்டிஎஸ் மாலி, எம்டிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இந்திய கடலோர காவல்படை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கடலோர காவல் படை தகவல் தெரிவித்துள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய கடலோர காவல்படையின் அதிகாரப்பூர்வ தளமான indiancoastguard.gov.in சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31, 2022 ஆகும்.

காலியாக உள்ள பணியிடங்கள்:-

என்ஜின் டிரைவர்: 8
சாரங் லாஸ்கர்: 3
மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர்: 24
தீயணைப்பு வீரர்: 6
ICE ஃபிட்டர் (திறமையானது): 6
ஸ்டோர் கீப்பர் கிரேடு-II: 4
ஸ்ப்ரே பெயிண்டர்: 1
எம்டி ஃபிட்டர்/ எம்டி டெக்/ எம்டி மெக்: 6
எம்டிஎஸ் (மாலி): 3
எம்டிஎஸ் (பியூன்): 10
எம்டிஎஸ் (டாஃப்டரி): 3
எம்டிஎஸ் (ஸ்வீப்பர்): 3
தாள் உலோகத் தொழிலாளி : 1
எலக்ட்ரிக்கல் ஃபிட்டர் : 1

விண்ணப்பிக்கும் முறை:-

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் சாதாரண தபால் மூலம் “தி கமாண்டர், கடலோர காவல்படை மண்டலம் (இ), நேப்பியர் பாலம் அருகில், சென்னை- 600009” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *