ஐபிஎல் ஸ்பான்ஷர்சிப் குறித்து பதஞ்சலி கூறுவதென்ன
சீன நிறுவனங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமிப்பது ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதுவரை ஐபிஎல் சரியாக முறைப்படி பிசிசிஐ இடம் எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார் யோகா குரு பாபா ராம்தேவ்,
இவர் கூறுகையில் வேறு இந்திய நிறுவனங்கள் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்சிப் கோரவில்லை என்றால் மட்டும் பதஞ்சலி முன் வரும் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும்.
ஆன்லைன் கல்வி செயலியான பைஜூஸ் நிறுவனத்திற்கும், குளிர்பான நிறுவனமான கொகோ கோலாவுக்கு போட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன.
இதனை அடுத்து ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருக்க விரும்புகிறோம் என்று பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடர் டைட்டில் ஸ்பான்சராவ திலிருந்து விவோ நிறுவனம் விலகிக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டன.
டைட்டில் ஸ்பான்சர்கள் பிசிசிஐ தேடுவதாக தகவல் வெளியானது. நடப்பாண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக வேறு நிறுவன முன்வரவில்லை என்றால் மட்டுமே பதஞ்சலி முன்வரும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.