யூபிஎஸ்சியின் மாவட்ட ஆட்சிப்பணித் தேர்வு அறிவிப்பு!
யூபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய ஆட்சிப்பணி ஆணையம் நடத்தும் இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய பாராஸ்ட் தேர்வுக்கு தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.
மார்ச் 4, 2021 ஆம் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் , ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற் விருப்பமும் தகுதியும் உடைடோர் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்
மொத்தம் அறிவ்க்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 822 ஆகும். இந்திய சிவில் சர்வீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை 712, இந்திய பாரஸ்ட் ஆபிசர் பணியிடங்கள் எண்ணிக்கை 110 ஆகும்.
வயது
21 வயது முதல் 32 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்கள் ஆவார்கள். மேலும் விதிமுறைப்படி விண்ணப்பத்தாரர்கள் அந்தந்தப் பிரிவினர் சலுகைகள் பெறலாம்.
தேர்வுகள்
முதண்மை தேர்வு, மற்றும் மெயின்ஸ் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்வு பெறலாம்.
விண்ணப்பம்
விண்ணப்பக்கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். பெண்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர் விணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் ஆஃப்லைனில் செலுத்தலாம்.
இந்திய ஆட்சிப்பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதியானது 24-3-2021 ஆகும்.
விண்ணப்பங்களை விண்ணப்பிக்க பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என்ற இரண்டு பகுதிகளை விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தங்களுடைய எம்பிசி பிரிவுக்கான ஒபிசி எனப்படும் மத்திய அரசின் சாதிச் சான்றிதழ் தயராக வைத்து விண்ணப்பித்தல் நலம் பயக்கும். விண்ணப்பிக்க ஆன்லைன் லிங்கினை கொடுத்துள்ளோம். https://upsconline.nic.in/mainmenu2.ph
இந்திய ஆட்சிப்பணி கனவு கொண்டவர்கள் இந்த தேர்வு தயராக தீயாய் திட்டமிட்டுப் படித்து கொண்டு தயராக இருப்பார்கள். விண்ணப்பத் தகவகள் விண்ணபிக்க இங்கே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தளத்தினை கிளிக் செய்யவும். upsc.gov.in அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் அதனை கிளிக் https://www.upsc.gov.in/sites/default/files/Notice-CSP-2021-Engl-04032021.pdf செய்து படிக்கவும்.