சோழ சோழ சோழர்களின் பொன்னியின் செல்வன் வரிகள்
பொன்னியின் செல்வன் படத்தில் சோழ சோழா பாடல் வ்ரிகள் சோழ தேச வளம் பெருமைகளை எடுத்துக்கூறும். இசையும் பட அமைப்பும் பிரமாண்டமாய் இருக்கும்.
கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து
பரி பரி பரி துடிக்க
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க
ஆடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க
எதிரிகளை
வாளோடு வேலோடு ஹோய்
போராடு போராடு ஹோய்
பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்
வரி வரி புலி அஞ்சாதடா
துஞ்சாதடா சோழா சோழா
மற மற புலி வீழாதடா
தாழாதடா சீலா சீலா
வீரம் மானம்
புலி மகன் இரு கண்ணல்லோ
ஏரே வாடா
பகை முகம் செகும் நேரம் வீரா
கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து
பரி பரி பரி துடிக்க
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க
ஆடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க
எதிரிகளை
வாளோடு வேலோடு ஹோய்
போராடு போராடு ஹோய்
பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்
புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்
அக முக நக கள்ளாடிட தள்ளாடிட
வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா இன்னாமித
ஆசை தீதா
மண்ணான மண் மேல் பித்தானேன்
ஹேய் விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்
ஹேய் கண்ணான குடி மேல் பித்தானேன்
ஏய் பெண்ணான பெண்ணாலே பித்தானேன்
அரக்கி எனது தேயமும் காயமும் நீயடி
உடல் உடல் உடல் முழுக்க
செருகளத்து வடு வடு வடுவிருக்க
ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க
வருடமென்ன கொடு
சோமரசம் குடடா மரடா
இவன் பயணம் இனி ஓயாதே
எடு வாளை எடு நடடா நடடா
வெறி பிடித்த புலி ஓயாது
அக முக நக கள்ளாடிட தள்ளாடிட
வாடா தோழா
இக பர சுகம் எல்லாமிதா இன்னாமித
ஆசை தீதா
சிந்தித்தோம் பெருந்தேச கனவினை
சந்தித்தோம் கடும் போரின் கெடு வினை
நிந்தித்தோம் கொடுந் கூட்டப்பகை அழித்தோம்
மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை
தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை
கண்டித்தோம் அடங்காரை சிறை எடுத்தோம்
கற்பித்தோம் உயிர் சோழம் என
ஒப்பித்தோம் அதை வேதமென
மேகந்தொட்டு வானம் எட்டு
வேங்கை புலி இமயம் நாட்டு
கொடி கொடி கொடி பறக்க
தட தடத்து
பரி பரி பரி துடிக்க
கடும் மனதில்
வெறி வெறி வெறி பிறக்க
ஆடுகளத்தில்
பொறி பொறி பொறி பறக்க
எதிரிகளை கொடு
சோமரசம் குடடா மரடா
இவன் பயணம் இனி ஓயாதே
எடு வாளை எடு நடடா நடடா
வெறி பிடித்த புலி ஓயாது