சியானுக்கு ஜோடியாகும் சில்மிஷ நடிகை…
சேது பட நாயகரான சியான் விக்ரம் இன்றும் இளமை மாறாமல் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அடுத்தடுத்து நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவரின் வயது குறைந்து கொண்டே வருகிறது. அந்த அளவிற்கு அடுத்தடுத்த படங்களில் மிக இளமையாகவும் கவர்ச்சியாகவும் வசீகரத் தோற்றத்துடன் படங்களில் நடித்து வருகிறார். இன்றும் சினிமா வட்டாரத்தில் விக்ரமுக்கு மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை. விக்ரமின் மகனே திரைப்படத்திற்கு நடிக்க வந்த நிலையில் இன்றும் மகனை விட இளமையாக காட்சி அளித்து வருகிறார். அதிலும் இவன் நடித்த ஐ படம் மிகவும் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்தது.

இந்நிலையில் விக்ரம் தற்போது நடித்து வரும் பா ரஞ்சித் இயக்கி வெளியாக உள்ள திரைப்படமான சியான் 61 படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரபல பேமஸ் நடிகை நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் கீதா கோவிந்தம் படம் மூலம் தமிழ்நாட்டு மக்களை வெகுவாக கவர்ந்தவர்.
மேலும் படிக்க : அழகழகாகிறது தொடுகிறது.. கருப்பன் படம்

மேலும் இவரின் ஹாட்டான போஸ்களும் க்யூட்டான பேச்சும் அனைவரையும் கட்டி இழுத்து வைத்துள்ளது. ரஷ்மிகா மந்தனா என்றாலே இளைஞர்கள் குஷியாகி விடுகின்றனர். இளம் வயதிலேயே இவ்வளவு பேரும் புகழும் பெற்ற முன்னணி நாயகியாக ரஷ்மிகா மந்தனா வலம் வந்து கொண்டுள்ளார்.

மக்களின் ஹாட் குயினாக இருக்கும் ரஷ்மிகா மந்தனா பா ரஞ்சித் இயக்கம் விக்ரமின் சியான் 61 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். சியான் வெறியர்களும் ,ரஸ்மிகாவின் ரசிகர்களும் இப்படத்தின் வெளியீட்டிற்காக மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர். இவர்களின் ஜோடி கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும் என்று அனைவரும் வரி வருகின்றனர்.
மேலும் படிக்க : ரியல் தோனி பர்த்டே! ரீல் தோனி ட்ரெய்லர்!