முதல் முறையாக சீனா வருத்தம்…!
5000க்கும் மேற்பட்ட சீனர்கள் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில், முதல் முறையாக சீனா வருத்தம் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையே மோதல் வெடித்துள்ளதற்கு மிகவும் வருந்துகிறோம்; உக்ரேனிய குடிமக்கள் பாதிக்கப்படுவது குறித்து தீவிர கவனம் செலுத்தி வருவதாக, சீன வெளியுறவு அமைச்சர் வாங் தெரிவித்துள்ளார்
மேலும், அரசியல் தீர்மானத்திற்கு உகந்த, அனைத்து ஆக்கபூர்வமான சர்வதேச முயற்சிகளையும் சீனா ஆதரிப்பதாக, உக்ரைன் வெளியுறவு அமைச்சருக்கு வாங் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், போரை நிறுத்த சீனாவின் மத்தியஸ்தத்தை உக்ரைன் எதிர்நோக்குவதாக, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். உக்ரைனின் Lviv நகரை நோக்கி சாலை மார்க்கமாக பயணித்த சீன நாட்டவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் சிக்கியதாகவும், அவரது நிலைமை குறித்து சீனா மேற்படி தகவலை வெளியிடவில்லை என கூறப்படுகிறது
பல்வேறு நாடுகள் தங்களது குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றி வந்த நிலையில், இந்தியாவை போல் சீனாவும் போர் துவங்குவதற்கு முன் வெளியேற்றாமலேயே இருந்து வந்துள்ளது. Kyiv இல் உள்ள சீன தூதரகம், ஆரம்பத்தில் சீனக் கொடியை தங்கள் வாகனங்களில் பொருத்திய பிறகு பிற நாட்டு எல்லைக்கு வருமாறு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியது.
ஆனால், உக்ரைனில் சீனர்களுக்கு எதிரான போக்கு அதிகரித்ததால், சீனக் கொடியை பொருத்த வேண்டாம் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.