செய்திகள்தேசியம்ராணுவம்

திருந்தாத சீனா விரட்டி அடிக்கப் போகும் இந்தியா!

திருந்தாத சீனா விரட்டி அடிக்கப் போகும் இந்தியா, சீனாவிற்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் ஏறாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது 1962 லேயே இந்தியாவிற்கு ஆட்டம் காண்பித்த நாடு இந்த சீனா தான் தற்போது இந்தியாவை தரம் குறைத்து மதிப்பிடுகிறது என்று எண்ண தோன்றுகின்றது.

காரணம் என்னவெனில் நாம் எவ்வளவு அடித்தாலும் திருந்தாமல் எல்லையில் வந்துநின்று எடக்கு முடக்கு வேலைகளை செய்து தன்னை போர்களின் தலைவன் என அறிவிக்க முற்படுகின்றது.

சீனா லடாக்கில் இருக்கும் பகுதியில் தனது படைகளை குவித்து வந்தது நாம் தெரிந்ததுதான், ஆனால் அதில் என்ன புதிது என்று கேட்டால் தற்போது சீனா அங்கு நவீன படகு ரகங்களை உள்ளிறக்கி ஆடு புலி ஆட்டம் செய்கின்றது. சீனா நிச்சயம் போருக்கு இந்தியாவை இழுக்க வேண்டும் என்று தெளிவாக இருக்கின்றது என்பது தெரிகின்றது.

பாங்காங் திஷோ பகுதியில் சீனா அமைத்துள்ள போர் இருப்பிடங்கள் அனைத்தும் இந்தியாவை பிடித்து இழுக்கவே என்பது தெளிவாகத் தெரிகின்றது. சீனா இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூரில் பயங்கரவாதிகளை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

சீனா விஷப்பாம்பு போன்றது, அது காலைச் சுற்றுவது கழுத்தை பிடிக்கத்தான் என்று நாம் உணர வேண்டும். சீனாவை எதிர்க்கச் சரியான ஆயுதமாக நம்மிடம் பிரம்மோஸ், ரஃபேல் போன்றவை இருக்கின்றது.

இருந்தும் இந்தியா இதுவரை வரலாற்றில் யாரையும் வம்புக்கிழுத்து வாழ்ந்த நாடல்ல, அதே போன்று நம்மைச் சீண்டிக்கொண்டே இருந்தாள் நான் சிரித்துக் கொண்டே இருப்போம் என்றும் சீனா போன்ற நாடுகள் நினைக்கும் பட்சத்தில் இந்தியாவின் போக்கை எவராலும் தடுக்க முடியாது.

இந்திய வீரர்களின் துணிவு, அற்பணிப்பு தேசப்பற்று, கருணை, வேகம் இவை அனைத்தும் இந்தியாவின் பலம் என்று சொல்லலாம் பற்றாக்குறைக்கு சுற்றியுள்ள பக்கத்து நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆதரவு தரும் நாடுகளாக இருக்கின்றது என்பது ஒரு நல்ல சூழல் தான் ஆகவே வாயைமூடி சீனா சும்மா இருந்தால் நல்லது, வம்புக்கு இழுத்து வாழ்வை இழக்க வேண்டாம்.

சீனா உள்நாட்டில் இருக்கும் சிக்கலைத் தீர்க்க முடியவில்லை என்றாலும் நம்மை வம்பிழுப்பதை விடுவதில்லை. மோடி அமைதியாக இருக்கின்றார் என்றால் அவரு கேரக்டரே புரிவதில்லையா சீனாவுக்கு தெரியவில்லை. பார்ப்போம் அடுத்து என்னவென்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *