பாயும் சீனா பம்மி வருகின்றது!..
சீனா உலக நாடுகளிடம் சுமூகமாக ஆரம்பித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளை அனைத்து உலக வளர்ச்சிக்கு ஆலோசனை கூற கேட்டுகொண்டுள்ளது.
வியக்கும் உலக நாடுகள் சீனாவுக்கு என்ன ஆச்சு……
சீனா நலம் தானா என்பதுபோல் உலக நாடுகள் டிராகன் நாட்டை உற்றுநோக்கி ஆரம்பித்துள்ளன. இது சீனா தானா இல்ல சீன்தானா என்ற டவுட்டும் மக்களுக்கு இருந்திருக்கின்றது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமாக, அமெரிக்கா தனது ஆட்டத்தை சீனாவுக்கு எதிராக தொடங்கியது. வர்த்தகத்தில் சீனாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது.
2019 சீனாவிற்கு இறங்குமுகமாக அமைந்தது. 2020 கோபம் அமெரிக்காவை உச்சக்கட்டத்தில் வெறி கொள்ள வைத்தது என்று சொல்லலாம் தன் மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுப்பு தெரிவித்து சீனா அறிக்கைகள் அறிவித்தது.
உலக வர்த்தக மேம்பாட்டுக்காக சீனா கருத்து வேறுபாடு….
உலக வர்த்தக மேம்பாட்டுக்காக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் சீனா கருத்து வேறுபாடுகளை களைய முன் வந்திருப்பதாக சீனா தகவல் வெளியிட்டு இருக்கின்றது.
சீனாவின் ஆட்டத்தை இந்தியா உட்பட சுற்றியுள்ள நாடுகள் அடக்கி வைத்ததன் காரணமாக சீனாவிற்கு பெரிய அளவில் நட்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அடுத்து சீனா தனது வர்த்தகத்தை காப்பாற்றிக்கொள்ள சீனா பதுங்கி இருக்கின்றது.
அண்டை நாடுகளுடன் ஆட்டத்தை நடத்தி வந்த சீனா தற்போது அமைதியாக காய்களை நகர்த்த திட்டமிடுகிறது. அமெரிக்காவின் காலை பிடித்து இருக்கின்றது சீனாவின் இந்த இறங்கு முகத்தை பார்த்து உலக நாடுகள் உற்று நோக்கிக் வருகின்றன. அடுத்து சீனா திட்டம் என்னவாக இருக்கும் என்ற சந்தேகமும் வருகின்றது.