சீன ஆப்புகளுக்கு வருகின்றது ஆப்பு
சீனாவின் உளவு நடவடிக்கையால் இந்தியாவின் பாதுகாப்பு உறுதி காரணமாக இந்தியா 59 சீன செயலிகளைத் தடை விதித்தது. சீனாவின் பப்ஜி போன்ற செயலிகளை இந்தியா தீர்த்துக்கட்ட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது என தகவல்கள் கிடைக்கின்றது.
இந்தியா சீனா எல்லை பிரச்சினை காரணமாக சீனா இந்தியாவை முடிக்க தனது உலவு நடவடிக்கையை தொடங்கியது. இந்தியாவின் பாதுகாப்பும் மற்றும் உறுதித் தன்மை காரணமாக சீனாவின் 59 செயல்களை இந்தியா தடை விதித்தது.
டிஜிட்டல் பாதுகாப்பு என்பதை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. இதனை அடுத்து சீனாவின் மற்ற செயலிகளையும் நிறுத்த இந்தியா திட்டமிட்டு வருகின்றது.
இதன்படி டிக் டாக் லைட், ஹலோ லைட் ஷேர், இட் டி விலைட், உள்ளிட்ட அனைத்தையும் தடைசெய் இந்தியா ஆலோசித்து வருகின்றது.
அலிபாபாவின் பப்ஜியும் இதில் அடக்கம் என்ற தகவலும் கிடைத்துள்ளன. பப்ஜி கேம் தடை செய்யப்பட வேண்டும் என்று ட்ரெண்டிங் தற்போது வைரலாகி கொண்டிருக்கின்றது. இதுகுறித்து அடுத்த கட்ட நடவடிக்கை மத்திய அரசு விரைந்து செயல்படும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.
இந்தியாவில் மட்டும் அலிபாபாவின் பப்ஜி 175 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்ற தகவல்கள் என்ற செயலி ஆராய்ந்தபோது கிடைத்தது.
இந்த செயலின் இளைஞர்களை முடமாக்கி மூளை சலவை செய்து அவர்களை தடமாற செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று இதுகுறித்து உளவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியா தற்போது 80 கோடி இளைஞர்களை கொண்டுள்ளது. இந்தியாவின் முக்கிய பணிகளில் இந்த இளைஞர்களை ஒருங்கே அறிவுடன் கட்டமைத்து செல்வதாகும். இந்த நேரத்தில் இந்தியா தனது இளைஞர் சக்தியை வலிமையாக கட்மைக்க வேண்டும.
அதனை இந்தியா சிறப்புடன் செய்ய வேண்டும். இந்தியா தற்போது இதுகுறித்து நடவடிக்கைகளில் இருக்கின்றது. டிஜிட்டல் காலத்தில் கொரோனா நேரத்தில் ஆன்லைன் பாடங்கள் படிக்கவும், ஆன்லைனில் வேலை செய்ய்யவும் வாய்ப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றன. டிஜிட்டலில் இந்தியா தடம் பதித்துக் கொண்டு வருகின்றோம் அதே போல் நாம் சிறப்பாகச் செயல்படும் நேரத்தில் பாதுகாப்பு அவசியம் என்பது தெரிகின்றது அதற்காக இந்தியா நிச்சயம் மெனகெடும் பாதுகாப்பு கருதியே இந்தியா இந்த முடிவை எடுக்கும்.