உங்களில் ஒருவனே :- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..
உங்களால் உருவாக்கப்பட்டவன் நான், என்றும் உங்களில் ஒருவனே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று முதல்வர் முகஸ்டாலின் சுய சரிதையாக குறிக்கும் வகையில் உங்களில் ஒருவன் என்ற புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்பி ராகுல், கேரள் முதல்வர் பினராயி விஜயன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் , இந்த வி ழாவில் பேசிய முதல்வர், கலைஞர் போல எனக்கு பேசவோ, எழுதவோ தெரியாது, ஆனால் முயன்று பார்ப்பேன் எனத் தெரிவித்தேன்; அப்படி முயன்று பார்த்ததுதான் உங்களில் ஒருவன் நூல். நான் என்றும் மக்களில் ஒருவன் என்பதை சொல்லவே, உங்களில் ஒருவன் என நூலுக்கு பெயர் வைத்துள்ளேன். என்னுடைய முதல் 23 ஆண்டுகால வாழ்க்கைதான் உங்களில் ஒருவன் புத்தகம்; விளையும் பயிர் முனையிலேயே தெரியும் என்பார்கள், நான் அரசியல் பயிராகவே வளர்ந்தேன்.
அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என என்னிடம் கேட்டார்கள்; நான் அரசியலில்தான் இருந்திருப்பேன் என பதில் சொன்னேன்; அரசியல் என்பது எனது ரத்தத்தில் கலந்தது.கல்லூரி படித்தபோது நாடகம் போட்டது, திருமணம் செய்தது, திருமணமான 5 மாதத்தில் சிறை சென்றது என எல்லா திருப்பங்களையும் 23 வயதிற்குள் பார்த்தவன் நான். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஆதரவு தர வேண்டும். திராவிட ஆட்சி முறைதான் எங்களது கோட்பாடு; திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என பேசியுள்ளார்.