ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் பேசியதாவது
கொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று தற்போது சொல்ல முடியாது. 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியாளர் களின் கூட்டத்திற்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வை ஒத்தி வைப்பது தமிழக அரசின் நிலைப்பாடு என்று கூறினார். நாகையில் இது குறித்து பேசிய இவர், தமிழகத்தின் ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவே வெளி மாநிலத்தில் உள்ளவர்களுக்கு பணி வாய்ப்பு தரப்படுகின்றன. தமிழகத்தில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.
நாகை மாவட்டத்தில் 1016 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 37 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டன. கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பிறகு தனி மாவட்டமாக இயங்கும். நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று தொடர்ந்து கடிதம் எழுதி வருவதாக தெரிவித்தார்.
குழாய் பதிப்பில் பழைய பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே உள்ள திட்டங்களை ரத்து செய்து இருக்கிறோம். குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாகையில் 1,200 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. மூன்று ஆண்டுகளில் 2252 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் நோய் பரவல் இல்லாமல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். நாகை மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளில் 812 சாலை பணிகள் நடைபெற்றன. 33.5 கோடி ரூபாய் மதிப்பில் வேளாங்கண்ணியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.
நீட் தேர்வை ஒத்தி வைப்பதை தமிழக அரசின் நிலைப்பாடு ரெடிமேட் ஜவுளி பூங்கா உருவாக்கினால் நாகை மிகப்பெரிய வளர்ச்சி அடையும். 2500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். நாகை மாவட்டத்தில் ஏரிகளை தூர்வாரி தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.