முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!
திமுக தலைமையை மீறி போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடலூர் நெல்லிக்குப்பம் மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதை எதிர்த்து விசிகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ‘விசிக இடத்தில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து, கூட்டணி அறத்தைக் காக்க வேண்டும்’ என, விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், திமுக கவுன்சிலர்கள் போட்டி வேட்பாளர்களாக உடன்பாட்டை மீறி களமிறங்கி, பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். எதிரணியோடு கைகோர்த்துக் கொண்டு, பதவியை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டும் போக்கை அனுமதிக்க முடியாது. கூட்டணி கோட்பாட்டை திமுக தலைமை பாதுகாக்கும் என நம்புகிறோம் என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து சந்திக்க வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.