நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் பேச்சு:- ராகுல்காந்திக்கு முதல்வர் நன்றி..
தமிழர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆற்றிய எழுச்சியூட்டும் உரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சுயமரியாதையை உயர்த்திப்பிடிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களை கொண்ட தமிழர்களின் நீண்ட கால வாதங்களை நாடாளுமன்றத்தில் வலுவாக எடுத்துரைத்த ராகுல்காந்திக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இன்று அண்ணா நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள வரது நினைவிடத்திற்கு ஊர்வலமாக சென்ற முதல்வர், அங்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் இந்த ஆட்சியை அண்ணா நினைவுநாளில், அவர் துயிலுமிடத்தில் காணிக்கையாக்குவதை எனது கடமையாகக் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.