சமையல் குறிப்புயூடியூபெர்ஸ்

சைவ பிரியர்களின் அசைவ உணவு எப்படி செய்யலாம்

சைவப் பிரியர்களின் அசைவ விருந்தாக மாறும் சில உணவு வகைகள் உள்ளது. இந்த ஒரு சில உணவுகள் சைவ பிரியர்களும் அசைவ பிரியர்களுக்கு சமமாக ஒரு பிடி பிடிக்கும் ருசியில் அசைவ உணவின் ருசியில் இருக்கும் உணவு வகைகளின் ஒன்றான காளான் கிரேவி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். அதுவும் காரசாரமான செட்டிநாடு ஸ்டைலில் காளான் கிரேவியை செய்து பாருங்கள். அசைவ பிரியர்கள் கூட கேட்டு விரும்பு சாப்பிடும் உணவாக காளான் கிரேவியின் ருசியோ நாவில் எச்சில் ஊற வைக்கும் கிரேவி என் மணமோ மூக்கை துளைக்கும்.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

சீரகம் – 2 ஸ்பூன்

காளான் – 1 பாக்கெட்

கருவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

காய்ந்த மிளகாய் – 5

உளுந்து பருப்பு – 1 ஸ்பூன்

கடலை பருப்பு – 1 ஸ்பூன்

வர மல்லி – 1 ஸ்பூன்

காளான் கிரேவி செய்முறை

முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நாம் எடுத்து வைத்த காய்ந்த மிளகாய், வர மல்லி, சீரகம் ,உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி என்னை சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதில் உங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் இரண்டு காய்ந்த மிளகாய் போட்டுக் கொள்ளலாம். வெங்காயம் வதங்கிய பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அதன்பின்பு சுத்தம் செய்து வைத்த காளான் துண்டுகளை போட்டு கிளறி விட வேண்டும். காளான் சற்று வதங்கியதும் நாம் மறைத்து வைத்த பொடியை சேர்த்து நன்கு விட வேண்டும் இதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அவ்வளவுதான் காளான் கிரேவி ரெடி காளான் நன்கு வந்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு கடாயை இறக்குவதற்கு முன் மேலே கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். இப்படி ஒரு நாள் செய்து பாருங்கள் வீடே மணக்கும் அளவிற்கு காளான் கிரேவி இருக்கும். அதே போல் நான்வெஜ் பிரியர்கள் கூட விரும்பி சாப்பிடும் கிரேவியாக இருக்கும் காரசாரமான காளான் கிரேவியை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து அசத்துங்கள். இந்த காளான் கிரேவி சாதத்திற்கு வைத்து சாப்பிடலாம் அல்லது சப்பாத்தி தோசை ஆகியவற்றிற்கு கூட சேர்த்து சாப்பிடும் பொழுது மிக அருமையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *