விளையாட்டு

சேத்தன் சவுகான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மரணத்திற்கு பிரதமர் இரங்கல்

இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராகவும், உத்தரபிரதேச அரசில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் சேத்தன் சவுகான். கொரோனா தொற்று காரணமாக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் ஜூலை 12 அன்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு உறுப்பு செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழக்க நேரிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளன.

சேத்தன் சவுகான் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல. விடா முயற்சியின் மூலம் அரசியல் தலைவராகவும் உயர்ந்தவர். பொதுப்பணியில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளவர்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகான் மறைந்தார். பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்தினார். அவரது மறைவு வருத்தம் தருகிறது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் சேத்தன் சவுகான் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 73. 1969 முதல் 1981 ஆம் ஆண்டு வரையில் 40 டெஸ்ட் மற்றும் 7 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *