சேப்பக்கிழங்கு வறுவல்
கிழங்குகளில் பல வகைகள் இருந்தாலும் ஒரு சில கிழங்குகள் எப்படி சமைப்பது என்று தெரியாமல் விட்டுவிடுவார்கள். உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் உண்டு. இதில் சேப்பங்கிழங்கு வருவல் செஞ்சு பாருங்க.
- சேப்பங்கிழங்கு வருவல்
- சேப்பங்கிழங்கு சாப்பாட்டிற்கு சுவையை கூட்டும்.
- சாம்பார் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.
சேப்பக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்
சேப்பக்கிழங்கு 200, எண்ணெய் 2 தேக்கரண்டி, கடுகு, உளுந்தம் பருப்பு தாளிப்பதற்கு தேவையான அளவு. மிளகாய் வற்றல் 3, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், சிக்கன் மசாலா தூள் ஒரு ஸ்பூன், கரம் மசாலா கால் ஸ்பூன், மிளகாய் தூள் கால் ஸ்பூன்.
செய்முறை விளக்கம்
சேப்பங்கிழங்கை எடுத்து சிறிது நீர் விட்டு வேக விடவும். வெந்ததும் மேல் தோலை உரித்து விட்டு வில்லைகளாக சிறிதாக நறுக்கி வைக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் தாளித்து சிறிது கறிவேப்பிலைப் போட்டு வெந்த சேப்பங்கிழங்கை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
கிழங்குடன் உப்பு, மஞ்சள் தூள், தூள் வகைகளை சேர்த்து மேலும் சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும். மசாலா வதங்கி எண்ணெய் பிரியும் போது அடுப்பை ஆப் செய்யவும். சேப்பங்கிழங்கு சாப்பாட்டிற்கு சுவையை கூட்டும். சாம்பார் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.