மகளிர் ஐடிஐ-யில் உதவியாளர் வேலை வாய்ப்பு
அரசினர் தொழில் பயிற்சி (மகளிர்) நிலையத்தில் ஒப்பந்த உதவியாளர் பணி இடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் அம்பத்தூரில் இருக்கும் அரசினர் தொழில் பயிற்சி நிறுவனத்தில் ஒபந்த உதவியாளர் பணிக்கு ஒரு காலியிடம் இருப்பதால் அதனை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் வேலை பெறுபவர்களுக்கான அரிய வாய்ப்பு. கொரோனாவால் பணப்புழக்கம் மிகுந்து பாதிக்கப்பட்ட நிலைமையில் இருக்க வேலை திண்டாட்டமும் சேர்ந்து கொண்டால் மிகவும் கடினம். அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவைகளை முதல் ஆடம்பர வாழ்க்கையை வாழ அனைத்திற்குமே பணம் அவசியமாகிவிட்டது. மாதம் ஒன்றானால் சம்பளம் கைக்கு வரும் நிம்மதி வேலையுடன் இருந்தால் மட்டுமே முடியும். இந்தக் கடுமையான சூழலில் ஆங்காங்கே வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வந்து கொண்டிருப்பதை அவரவர் கல்வி மற்றும் அனுபவ தகுதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வது அவசியம். இந்த அறிவிப்பை படித்து உங்களுக்கு தகுந்த வேலையா என்பதைத் தெரிந்து விண்ணப்பியுங்கள்.
கல்வித்தகுதி
பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஒப்பந்த உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எந்த பட்டப்படிப்பு படித்திருந்தாலும் கணினி கையாளும் திறன் அவசியம்.
வயது வரம்பு
குறைந்தபட்சமாக 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயதாக எதையும் குறிப்பிடவில்லை இந்த நிறுவனம். மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பை காண இங்கே கிளிக் செய்யவும்
ஒப்பந்த காலம் மற்றும் சம்பளம்
உதவியாளர் பணியிடம் 11 மாத ஒப்பந்தத்தில் நிரப்பப்படுகிறது. இப்பணிக்கு ரூபாய் 12000 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க
கல்வி வயது என அனைத்திலும் தகுதி பெற்ற நபர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களின் நகலுடன் தபால் செய்ய வேண்டும். முழு விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய தேதி
விண்ணப்பங்கள் தபால் மூலம் 21-09-2020 க்குள் அலுவலகத்தை அடைய வேண்டும்.
இந்த வேலை வாய்ப்பு பற்றி மேலும் அறிய அதிகாரப்பூர்வமான இணையதளத்தை காணுங்கள்.