சென்னை மீளும் வாழும் விவேக்
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து அச்சத்தில் உள்ளனர். இதன் மூலம் மீண்டும் இரண்டாம் கட்ட ஊரடங்கு சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் சந்திக்கின்றன. இதனால் ஊரடங்கு மிகவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சென்னையில் மட்டும் நேற்று கோவித்19 தொற்று 1257 பேருக்கு உறுதியானது என்று தகவல்கள் கிடைக்கின்றன.
கொரோனா இதுவரை சென்னையில் மட்டும் 33244 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் தொற்று அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக சென்னையில் மீண்டும் 12 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட உள்ளது. அரசு இதனை அறிவித்துள்ளது மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
சமூக இடைவெளியை சுகாதாரம் சுத்தம் ஆகியவற்றை முழுமையாக பின்பற்ற வேண்டும். கைகளை நன்றாக கழுவ வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். மனதை தெளிவுபடுத்த வேண்டும். தேவையற்ற அச்சத்தை விட வேண்டும்.
அதிகம் செய்திகள் பார்த்து மன பயத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். ஆரோக்கிய உணவு, அடிப்படை உடற்பயிற்சி நல்ல தூக்கம், இது ஒன்றே போதுமானதாகும் தேவையற்ற அச்சம் குழப்பம், கலவரத்தையும் சென்னை மக்கள் விட வேண்டும்.
எங்கு சென்றாலும் வந்தாலும் பாதுகாப்பு என்பது அவசியம் ஆகும். மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம், அவசர தேவை என்றால் மட்டும் எங்கும் செல்லலாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக விவேக் போன்ற நடிகர்கள் பாசிட்டிவ் எனர்ஜி மக்களிடம் பரப்பி வருகின்றனர். பயத்தை விரட்டி தைரியமாக வாழ்வோம். தலைநகரம் பல மொழி மக்கள் கொண்ட பகுதி, தன்னை வளர்த்து இளமையை கொடுப்பது தென்னை, இந்த மண்ணை மிதித்தவரை கைவிடாது சென்னை அது மீண்டும் வாழும் வருவோரை வாழவைக்கும், என்ற கருத்தினை தெரிவித்து தன்னுடைய முதல் நேர்மறை சிந்தனை சரிவை பதிவு செய்துள்ளார் நடிகர் விவேக் அவர்கள்.
மக்கள் இந்த சவாலான கொரோனா சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தும் புத்திசாலித்தனம் அறியவேண்டும். எத்தனையோ சவால்களை சந்தித்து கடந்து வந்தோம் இதெல்லாம் எம்மாத்திரம் என்று துணிந்து நின்றான் வெற்றி நிச்சயம்