சென்னை பௌலரின் பிறந்தநாள் ஸ்பெஷல் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இன்று பிறந்தநாள்.
17 செப்டம்பர் 1986 சென்னையில் பிறந்திருக்கிறார் ரவிசந்திரன் அஸ்வின். இவரின் தந்தை ரவிச்சந்திரன் கிளப் லெவலில் பந்துவீச்சாளராக விளையாடியவர்.
பள்ளிப் பருவத்திலிருந்தே கிரிக்கெட் பயின்று வந்தவர் அஸ்வின். தன் பள்ளி கிரிக்கெட் ஆசிரியர்களை புகழ்ந்து கூறியுள்ளார். தன் பந்துவீச்சில் தக்க மாற்றங்களை கொண்டுவந்தது பள்ளிப் பருவத்து விளையாட்டு ஆசிரியர்கள். அவர்களே தம் வெற்றி பயணத்திற்கு பெரிய பங்களிப்பாக இருந்தவர்கள் என கூறியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வினை பந்துவீச்சாளராகவே பலருக்குத் தெரியும் ஆனால் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் பட்டியலில் இவரும் ஒருவர். 17 வயதிற்குட்பட்ட போட்டிகளில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடியவர்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரராக இவரின் பங்களிப்பு பல. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சு சாதனைகளை வேகமாக புரிந்துள்ளார். அதாவது 50 100 150 200 250 300 350 என்னும் விக்கெட் இலக்கு சாதனைகளை வேகமாக சாதித்துள்ளார்.
2016ல் உலக அளவில் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது பெற்றார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்த விருதை பெற இவர் மூன்றாவது இந்தியர். உலகளவில் அனைத்து விதமான கிரிக்கெட் வகையிலும் விளையாடி சாதித்தவர்.
இந்தியன் பிரீமியர் லீக் டி20யில் 2009லிருந்து ஆடத் தொடங்கிய இவர் 2010 முதல் 2015 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார். சில காரணங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேன் செய்யப்பட்டதால் ரைசிங் பூனே சூப்பர் ஜெயின்ட் அணியில் விளையாடினார். அந்த அணியின் கேப்டனாகவும் திகழ்ந்தார். நாளை மறுநாள் துவங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி அணியிற்காககாக விளையாடுகிறார்.
2011ல் இளவயது நண்பரான ப்ரீத்தி நாராயணனுடன் இவருக்கு திருமணம் நடந்தது. 2015ல் அகீரா மற்றும் 2016ல் ஆத்யா என இரு பெண்குழந்தைகள் பிறந்தார்கள். சென்னையில் வாழும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
நல்ல இசையுடன் இவரின் பந்துவீச்சை பார்த்த உங்களுக்கு அடுத்து திரைப்பட பாடலுடன் அருமையான பந்துவீச்சு.
ஐபிஎல் டி20 தொடருக்காக துபாயில் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மக்களே மேலும் பல வெற்றிகளும் சாதனைகளும் புரிய பிறந்தநாள் வாழ்த்துக்களை இவருக்கு கூறிவிடுங்கள்.