ஆன்மிகம்ஆலோசனை

சனி பார்வையை யோகமாக மாற்ற செய்ய வேண்டியவை

சனிப் பெயர்ச்சியை 12 இராசிகளிலும் ஒவ்வொரு ராசிக்காரர்களும் வாழ்வில் மூன்று முறை சந்திக்க வேண்டியுள்ளது. ஏழரைச் சனியில் ஜென்ம சனி, பாதச் சனி, கண்டகச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற சனி நிகழும். அவரவர்களின் கர்ம வினைப்படி பூர்வ புண்ணிய பலத்தினால் நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிற சனீஸ்வர பகவானுக்கு நிகர் எவருமில்லை.

பதவியில் இருப்பவர்கள், பதவியில் இல்லாதவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள் என பாகுபாடின்றி வழங்கக்கூடியவர் சனி பகவான். கண்கள் இமைக்கின்ற பொழுதில் பல விஷயங்களை நடத்திக்காட்டும் வல்லமை படைத்தவர் சனீஸ்வரர்.

ஒருவர் தன் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை யூகித்து பார்க்கும் முன்பதாகவே எல்லாம் நடந்து முடிகிறது. கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டாள் எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் ஒரு கணம் முடிந்துவிடும். ஜாதக ரீதியாக சனிபகவானால் யோகபலன் இருந்தால் எப்பேர்ப்பட்ட உயரத்திற்கும் அழைத்துச் செல்லுகின்ற ஆற்றல் வல்லமை சனீஸ்வரருக்கு உண்டு.

மேலும் படிக்க : சனி பிரதோஷத்தன்று ஸர்ப்ப தோஷ பரிகார ஸ்தலம்-திரியம்பகேஸ்வரம்

விநாயகரையும், ஆஞ்சநேயரையும், நவக்கிரகங்களில் உள்ள சனீஸ்வரரையும், வெங்கடாஜலபதி, ஈஸ்வரனையும், காலபைரவர் போன்ற தெய்வங்களை அதற்கேற்ற நாளில் சென்று வழிபட சனிப்பெயர்ச்சி பாதிப்பில் இருந்து விடுபட உதவும்.

மேலும் படிக்க : குரு பெயர்ச்சியை தொடர்ந்து சனிப்பெயர்ச்சி ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *