சோமவாரம் விரதத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பயன்கள்
மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவை உணவு, நீர், உடை போதுமானது. இவை இருந்தும் கல்வி, ஞானம் பெறுவதற்கு சில வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபட வேண்டும்.
சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமை அன்று சிவபெருமானையும், சந்திர பகவானையும் வழிபட வேண்டும். பொதுவாக சந்திரனை தொடர்ந்து திங்கட்கிழமைகளில் வழிபட்டு வருவதால் ஒளிமயமான வாழ்க்கையை பெறலாம். சந்திரனின் அருள் இருந்தால் அவர்கள் வாழ்வில் அழகான மனைவி அல்லது அழகான கணவர் துணையாக அமைவார்கள்.
சந்திர பகவானுக்கு விரதம் அனுஷ்டிக்க விரும்புபவர்கள். வளர்பிறை திங்கட்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று நவகிரக சன்னதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு வெள்ளை மலரான மல்லிகை பூக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அரிசி, பசும்பால், பசும் நெய், கலர் சேர்க்காத கேசரி இவைகள் வெள்ளை நிறம் என்பதால் இவற்றை பிரசாதமாக படைத்து வழிபடலாம் அல்லது அன்றைய தினத்தில் அரிசியை தானமாக கொடுக்கலாம். சந்திர பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து பசுநெய்யில் தீபமேற்றி வழிபட்டு இன்றைய தினங்களில் சிவபெருமான் பார்வதி தேவியையும் வணங்குவது மிகவும் விசேஷம்.
இன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் உண்ணா விரதம் மேற்கொள்வது சிறப்பு. முடியாத பட்சத்தில் மூன்று வேளையும் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பசும்பால் மட்டும் அருந்தலாம். பௌர்ணமி தினமாக விரதமிருந்தால் இன்றைய தினத்தில் பௌர்ணமியே தரிசனம் செய்ய வேண்டும்.
பௌர்ணமி தினத்தில் விரதம் மேற்கொள்பவர்களுக்கு சிறந்த மனநிலை, ஞாபகசக்தி அதிகரிக்கும். கண் சம்பந்தப்பட்ட நோய் குறைபாடுகள் இருக்காது. சித்தம் தெளிவாக இருக்கும். ஆன்மீக அறிவு பெருகும். வெளியூர் பயணம் செல்லும் யோகத்தையும் சந்திர பகவான் அருள்வார்.
வாழ்க்கை ஒளிமயமாக இருப்பதற்கு சந்திர விரதத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள். மேலும் கோடை காலங்களில் மக்கள் தண்ணீர் பந்தல் அமைப்பது. மோர் பந்தல் அமைப்பது. விலங்குகளுக்கு தாகம் தணிப்பதற்கு வீட்டிற்கு வெளியே அல்லது மாடியில் தண்ணீர் வைப்பது. இவை சிறந்த பரிகாரங்களாக சந்திர பகவானின் அருளைப் பெற உதவும்.