வெளிய போறீங்களா…? குடை அவசியம் மக்களே..
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் மாதத்துடன் வடகிழக்குப் பருவமழை முடிந்து விட்டது. தற்போது மாசி மாதம் வரை பனிகாலம் தான் என்றாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டு அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், நாளைய தினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல் ,நீலகிரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.