செய்திகள்தமிழகம்தேசியம்

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு.

யமுனை ஆற்றில் மாசு நுரை அதிகரித்துள்ளன. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இது பற்றி கவலை தெரிவித்துள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளன.

யமுனை ஆற்றில் மாசு நுரை

  • ஆற்றில் கழிவுகளால் தேங்கிய  நுரையை அகற்ற மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு.
  • கழிவு நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
  • கழிவுநீரை சுத்திகரிக்க தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை.

யமுனை ஆற்றங்கரையில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர், சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக செயல்படாமல் இருப்பதால் ஆற்றில் நுரை ஏற்படுவதையும், அமோனியா அளவு அதிகரிப்பதையும், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் இதற்கு முன்பே கண்டுள்ளன.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

ஆற்றில் நீரின் தரத்தையும், ஆற்றில் வெளியேற்றப்படும் நீரை வடிக்கும் பணிகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வந்தது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் திறந்து விடப்படுவது, தற்போது உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் இருப்பது, போன்றவை இதற்கு முன்பே கண்டுள்ளது.

சுத்திகரிக்கப்படாத கழிவுகள் யமுனையில் கலப்பதால் பாஸ்பரஸ் அளவு அதிகரித்து நுரை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளன. கழிவு நீரை சுத்திகரிக்க தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளன. இவை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு.

டிசம்பர் 15ஆம் தேதி

இந்த உத்தரவை மேலும் ஹரியானா உத்திரப்பிரதேசம் போன்ற பிற மாநிலங்களுக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 15ஆம் தேதிக்குள் கழிவுநீர் சுத்திகரிப்பு  விதிமுறைகள் முறையாக பின்பற்றுவதை நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறியுள்ளன.

பல வடிகால்கள் முறையாக செயல்படவில்லை. வடிகால்கள் பயன்படுத்தப்படாமல் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பதால் இந்த நுரை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *