பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு
கேரள மாநிலத்தில் மத்திய அரசு வேலை. கேரள மாநிலம் என்று கூறியவுடன் முதலில் நினைவுக்கு வருவது கொச்சின்.
கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வெவ்வேறு பொறியியல் படிப்பு பிரிவில் அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு வெவ்வேறு பொறியியல் பட்டபடிப்பு பிரிவுகளில் படித்து விட்டு வேறு வழியில்லாமல் ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் அவல நிலை அனைவருக்கும் அறிந்தது. தற்போது மத்திய அரசு அவரவர் பிடித்தமான பிரிவில் பணியிடங்கள் காலியாக இருப்பதை நிரப்புவது குறித்து மகிழ்ச்சியான செய்தி வெளியிட்டுள்ளனர்.
எட்டு பணியிடங்களுக்கு 47 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பள வடிவம் கொண்ட சூப்பரான வேலை வாய்ப்பை தவறவிடாதீர்கள். இதோ இந்த வேலை வாய்ப்பின் முழு விவரங்களை பாருங்கள்.
பணியிடங்கள்
மெக்கானிக்கல்-3
எலக்ட்ரிக்கல்-2
இன்ஸ்ட்ருமெண்டேஷன்-1
சிவில்-1
சேஃப்டி-1
அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வமான அறிவிப்பு இதோ
கல்வி தகுதி மற்றும் அனுபவம்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங் சிவில் இன்ஜினியரிங் சேஃப்டி இன்ஜினியரிங் என ஐந்து பிரிவுகளுக்கு ஏற்றவாறு அந்தந்த தொழில் சார் நான்கு வருட பொறியியல் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு பிரிவில் விண்ணப்பம் செய்ய கல்வி தகுதியோடு அனுபவ தகுதியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவரவர் பட்டப்படிப்பின் பிரிவிலும்/விண்ணப்பிக்கும் பிரிவிலும் குறைந்தபட்சமாக நான்கு வருட அனுபவங்கள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 35 வயது என இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அவரவர் பிரிவுகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பில் சற்று தளர்வுகள் உண்டு.
சம்பள வடிவம்
மூன்று வருட காண்ட்ராக்ட் பேரில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மாதாந்திரமாக முதல் வருடத்திற்கு ₹47,000 இரண்டாம் வருடத்திற்கு ₹48,000 மூன்றாம் வருடத்திற்கு ₹50,000 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் பணியாளர்கள் செய்யும் கூடுதல் நேர வேலைக்கு ₹3000.
விண்ணப்பிக்க
இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை தபால் செய்ய வேண்டாம். ₹200 விண்ணப்பக் கட்டணம் செலுத்தியே விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வேண்டும். இந்தப் பணியிடங்களை பற்றி மேலும் அறியவும் விண்ணப்பிக்கவும் இங்கே கிளிக் செய்யவும்
https://cochinshipyard.com/Career
விண்ணப்பதாரர்களுக்கு சிலேட்குச்சியிலிருந்து ஒரு அறிவுரை:
விண்ணப்பங்களை நிரப்பும் நேரத்தில் தங்களுடைய அனைத்து விதமான விவரங்களையும் சரியாக எடுத்து வைத்துக் கொண்ட பின்னரே விண்ணப்பத்தை நிரப்புவதல் இறங்குதல் நன்று.
தேர்வு முறை
நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கொரோனா காரணமாக காணொளி மூலமே நேர்காணல்கள் நடக்க வாய்ப்பு என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் உங்கள் கல்வித்தகுதிக்கு 40%, அனுபவத்திற்கு 40%, நேர்காணலுக்கு 20% என பிரிக்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கி விண்ணப்பதாரர்களை அதிகாரிகளாக தேர்வு செய்கின்றனர்.
முக்கிய தேதி
இணையதளம் மூலமாக சேர்க்கப்படும் இந்த விண்ணப்பங்கள் 25 செப்டம்பர் 2010 மாலை 5 மணிக்குள் முடிவடைகிறது.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வமான இணைய தளத்தை பார்க்கவும்.