Job opportunity 2023: வெறும் டிகிரி முடித்திருந்தால் போதும் 1,40,000 சம்பளத்தில் அரசு வேலை தவறவிடாதீர்…
மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐசி தொழிலாளர் காப்பீட்டு கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளது. ஐந்து பிரிவுகளின் கீழ் செயல்படும் காப்பீட்டு திட்டத்தில் காலியாக உள்ள 17,710 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்ப அணிகளுக்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 13.11.2023 ஆகும். கொடுக்கப்பட்டுள்ள தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
காலிப்பணியிடங்கள்
இஎஸ்ஐசியில் மொத்தம் 17,710 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணி வாரியாக பார்த்தால் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 3,341 பேர், லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்கு 1,923 பேர், அப்பர் டிவிஷன் கிளர்க்/அப்பர் டிவிஷன் கிளர்க் கேஷியர் பணிக்கு 6,435 பேர், ஹெட் கிளர்க்/அசிஸ்டென்ட் பணிக்கு 3,415 பேர், சோஷியல் செக்யூரிட்டி ஆபிசர்/மேனேஜர் கிரேட் II/சூப்பிரண்ட் பணிக்கு 2,596 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி
இந்த பணிகளுக்கு 10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதாவது மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 10ம் வகுப்பு முடித்தவர்களும், அப்பர் டிவிஷன் கிளர்க்/அப்பர் டிவிஷன் கிளர்க் கேஷியர் மற்றும் சோஷியல் செக்யூரிட்டி ஆபிசர்/மேனேஜர் கிரேட் II/சூப்பிரண்ட் பணிக்கு பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஹெட் கிளர்க்/அசிஸ்டென்ட், லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்காகன கல்விதகுதி விபரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளது.
சம்பளம்
மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டு திட்டதால் அறிவிக்கப்பட்டுள்ள இப்ப அணிகளில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் அவரவர்களின் பதவி நிலைக்கு ஏற்ப மாதம் ரூ.18000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு
மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள்ளும், , அப்பர் டிவிஷன் கிளர்க்/அப்பர் டிவிஷன் கிளர்க் கேஷியர் பணிக்கு 18 வயது முதல் 27 வயதுக்குள்ளும், சோஷியல் செக்யூரிட்டி ஆபிசர்/மேனேஜர் கிரேட் II/சூப்பிரண்ட், லோவர் டிவிஷன் கிளர்க், ஹெல்கிளர்க்/அசிஸ்டென்ட் பணிக்கு அதிகபட்சமாக 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையின் மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கேலி கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க கடைசி நாளான 13.11.2023 தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே வரவேற்கப்படுகிறது.
அதுகாரப்பூர்வ இணையதளம்
விண்ணப்பபடிவம் esic.nic.com என்று இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.